Home சூடான செய்திகள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள்

உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள்

25

captureஉடலுறவு, காதல் இரண்டுமே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத இரண்டு விஷயங்கள். இரண்டுமே பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருப்பது மிக அவசியம். அதனால் உடலுறவுக்கு முன் கீழ்வரும் சில விஷயங்களை செய்வது பாதுகாப்பானதாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும்.

முதலில் உடலுறவுக்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று யோசித்துக்கொள்ளுங்கள். முதலில் மனதளவிலும் உடலளவிலும் தயாராகுங்கள்.

பாலியல் நோய்த்தொற்றுக்கள் எதுவும் தாக்காமல் இருக்க முதலில் பாதுகாப்பாக உடலுறவு கொள்வதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். உங்கள் துணைக்கு இதுபோன்று எந்தவித நோய்த்தொற்றும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஓருவேளை கர்ப்பம் தரிப்பது குறித்து ஐடியா இல்லாமல் இருந்தால் ஆணுறை பயன்படுத்துவது நல்லது. ஆணுறை பயன்படுத்தி உறவு கொள்ளம்போது எந்த பயமுமின்றி, ஆரோக்கியமான உடலுறவை மேற்கொள்ள முடியும்.

உடலுறவுக்கு முன்பாக கர்ப்பம் தரிப்பது குறித்தும் நோய்த்தொற்றுக்ள குறித்தும் கூச்சப்படாமல் உங்கள் துணையுடன் கலந்து பேச வேண்டும்.

உடலுறவுக்கு முன்பிருந்தே முழு கிளர்ச்சியுடன் இருப்பது அவசியம். அப்போது தான் உடலுறவில் நீங்கள் உச்சத்தை எளிதில் எட்டவோ மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தை அடையவோ முடியும்.