உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் பல நன்மைகள் அடையலாம் என ஏற்கெனவே பல ஆய்வுகளின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். ஆனால், சமீபத்திய ஆய்வில், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு தனிப்பட்ட நன்மை உண்டாகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் பெண்கள் அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் அவர்களுடைய மூளையின் வலிமை அதிகரிக்கிறது. ஞாபக சக்தி ஊக்கம் அடைகிறது என கண்டறிந்துள்ளனர்.
பி.வி.ஐ (Penile-Vaginal Intercourse) என்பது ஆண்குறி புணர்புழை உடலுறவு ஆகும். இதனால் உண்டாகும் தாக்கத்தால் இளம் பெண்களுக்கு மூளையில் நினைவு வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முந்தைய ஆய்வில் மிருகங்களுக்கு உடலுறவு மூலமாக நினைவு திறன் அதிகரிக்கிறது என கண்டறிந்தனர்.
பிறகு இது குறித்து பெண்கள் மத்தியில் ஆய்வு துவங்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆண்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளும் 18 – 29 வயதுக்குட்பட்ட 78 பெண்கள் கலந்துக் கொண்டனர். இவர்களது ஞாபக திறன் கணினி உதவியால் கண்காணிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதுக்குறித்த ஆய்வறிக்கை ஆர்சீவ்ஸ் ஆப் செக்சுவல் பிஹேவியர் என்ற நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அடிக்கடி பெண்கள் உடலுறவில் ஈட்படுவதால் வார்த்தைகளை சார்ந்து அதிக ஞாபக திறன் மேம்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் மூலமாக ஆய்வாளர்கள், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது ஹிப்போகாம்பஸ்-ல் புதிய திசு வளர செய்கிறது என கண்டறிந்துள்ளனர். ஹிப்போகாம்பஸ் என்பது நரம்பு மண்டலத்தில் உணர்வு, ஞாபகம் சார்ந்தது என கூறப்படுகிறது. அடிக்கடி ஆண்குறி புணர்புழை உடலுறவு கொள்ளும் பெண்களுக்கு ஹிப்போகாம்பஸ் அமைப்பு அதிகரிக்கிறது என விளக்கியுள்ளனர்…..!