உங்கள் துணையுடன் அதிக நெருக்கத்தை உருவாக்கி, உங்களை பிரிவினை இன்றி இணைக்க காதல் இன்றியமையாததாக இருக்கிறது. உங்கள் முரட்டு தனமான நடவடிக்கையை துணையிடம் நீங்கள் காட்டிவிட்டால், உங்கள் தாம்பத்தியம் சுவாரஸ்யமற்றதாகிவிடும்.. பொதுவாக பெண்கள் உடலுறவு முடிந்தவுடன், அப்படியே படுத்திருக்கவும், கணவரின் அன்பான தோளில் தலை சாய்க்கவும் விரும்புவார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாத ஒன்று, உடலுறவு முடிந்து சில மணி நேரங்கள் படுக்கையில் அப்படியே இருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும் என்பதே. இங்கு நீங்கள் உடலுறவுக்கு பின் செய்ய வேண்டிய 6 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
1 துடைத்தல்
உங்களது அந்தரங்க உறுப்பு ஈஸ்ட் தொற்றுகளால் பாதிக்கப்படும். இது உங்கள் கைகள் மூலமாக வாய் மற்றும் பல இடங்களுக்கு பாக்டீரியாக்களை பரவ செய்யும். வாசனையற்ற சோப்பு அல்லது குறைவான வாசனையுடைய சோப்பை கொண்டு அந்த பகுதியை சுத்தம் செய்யுங்கள்.
ஈரமான துணி அல்லது தினசரி குளியலுக்கு பயன்படுத்தும் துண்டை கொண்டு, உங்கள் அந்தரங்க உறுப்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை துடைக்கவும். அதன் உட்புறத்தில் உங்கள் உடலே தானாக சுத்தம் செய்து கொள்வதால், நீங்கள் அவற்றை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
2 ஓய்வு
உங்கள் காதலுடன் அன்பை பலப்படுத்தும் உடலுறவு முடிந்தவுடன், உங்கள் உடலுக்கு போதிய ஓய்வு தேவை. அதனால் நன்கு குளித்து உங்கள் அந்தரங்க பகுதியை சுத்தப்படுத்தி, அதெற்கென பயன்படுத்தப்படும் சில எண்ணெய்களை உபயோகியுங்கள். இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்து உங்கள் சருமத்தை மென்மையாக வைப்பதோடு, உங்களை நோய் தொற்றுகளிலிருந்து தள்ளி வைக்கிறது.
3 தண்ணீர் குடித்தல்
தோலை பாதுகாப்பாக வைக்க ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் உடல் பயிற்சி செய்து முடித்தவுடன் தண்ணீர் குடிப்பதை போல, உடலுறவு முடித்தவுடனும் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுறவுக்கு பின் காயங்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
4 உள்ளாடைகள்
மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் தவிர்த்து, வசதியாக இருக்கும் படியான ஆடைகளை அணிய வேண்டும். உங்கள் உள்ளாடைகள் இறுக்கமாக இருக்கும் போது, உங்கள் உடலால் சுவாசிக்க முடியாது. இது உடலில் கிருமிகள் மற்றும் பாக்ட்டீரியகள் அதிகரிக்க வழிவகுக்கும்.
5 கழிவறை செல்லுதல்
நீங்கள் உடலுறவு முடித்தவுடன், கழிவறை சென்று சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியம். உங்கள் அந்தரங்க பகுதியை கழுவுவது, நோய் தொற்றுகளால் பாதிக்கப்படும் வாய்ப்பை குறைகிறது. நீங்கள் உடனே செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் நீங்கள் உணரும் போது கட்டாயம் செல்லுங்கள்.
6 உலர்த்துதல்
இது உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். ஆம் உண்மைதான் நீங்கள் உங்கள் அந்தரங்க உறுப்பை உலர்த்த வேண்டும். உடலுறவின் பின் அந்தரங்க உறுப்பை உலர்த்துவது அதன் விளைவை பொறுத்த ஒன்றாகும். இது அந்த பகுதியில் முன் தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. உங்கள் அந்தரங்க உறுப்பை வெதுவெதுப்பான நீரில் கழுவி, முடியை உலர்த்த உபயோகிப்பவற்றை பயன்படுத்தி உலர்த்தவும்