Home பாலியல் உடலுறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தும் போது உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!

உடலுறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தும் போது உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்!

71

captureஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலுறவு பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உடலுறவு பேரின்பத்தைக் காண மட்டுமின்றி, பல நன்மைகளையும் வாரி வழங்கும். இன்றைய காலத்தில் தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு, பாலியல் வாழ்க்கை சிறப்பாக இல்லாமல் இருப்பதையும் கூறலாம்.

அதே சமயம் அதே உடலுறவு தான் தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்கும். திருமணத்திற்கு பின் பலர் குழந்தை பிறந்த பின் உடலுறவில் ஈடுபடுவதை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இப்படி உடலுறவு கொள்வதை ஒருவர் முற்றிலும் நிறுத்தும் போது, உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி நோய்வாய்படக்கூடும் உடலுறவு கொள்வதை நிறுத்தும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். இதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவஸ்தைப்படக்கூடும். ஆகவே இப்பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுங்கள்.

மன அழுத்தம் அதிகரிக்கும் பல மாதங்கள் உடலுறவு கொள்ளாமல் இருந்தால், மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். பொதுவாக உடலுறவில் ஈடுபடும் போது, மனதை அமைதியடையச் செய்யும் மற்றும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் ஹார்மோன்கள் வெளியிடப்படும். ஆனால் இதை முற்றிலும் தவிர்க்கும் போது, அடிக்கடி டென்சனாகி, மனநிலை மோசமாகும்.

பாலியல் பிரச்சனைகள் பல மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும் போது, பாலியல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக முன்கூட்டியே விந்து வெளிவரும் பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

கனவுகள் மாறும் உடலுறவு கொள்வதை ஒருவர் முற்றிலும் தவிர்க்கும் போது, அவருக்கு செக்ஸ் கனவுகள் அல்லது தூக்கத்திலேயே விந்து வெளியேறும். மேலும் உடல் ஒரு மாதிரி முறுக்குவதைப் போன்றே இருக்கும்.

மற்றவர்கள் மீது ஆர்வத்தைத் தூண்டும் தம்பதிகளுள் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் போது, இன்னொருவர் வேறொருவரால் ஈர்க்கப்பட்டு, இறுதியில் அது தம்பதிகளின் பிரிவிற்கு வழிவகுத்துவிடும். எனவே ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்பது மிகவும் இன்றியமையாது என்பது மறவாதீர்கள்.

பாலியல் நோய்களின் தாக்கம் குறையும் உடலுறவு கொள்ளாமல் இருப்பதால் கிடைக்கும் ஒரே நன்மை, பாலியல் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அதாவது பெண்களுக்கு யோனியில் ஏற்படும் தொற்றுநோய்கள் வரும் அபாயம் குறையும்.