இன்றைய பாஸ்ட்புட் உலகில், அக்கறை எடுத்துக்கொண்டு உடலை பராமரிக்காவிட்டால், உங்களுடைய உடலமைப்பை அழகாக்குவது சவாலாக இருக்கும். டயட்டை கடைபிடிப்பதுதான் உங்கள் எடையை மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்கும். பழச்சாறு உள்ளிட்ட நீர் ஆகாரங்களை அதிகம் பருகினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் எடையும் குறையும். உடலில் புதிய செல்கள் உருவாகும்.
கீழ்க்கண்ட 8 பானங்களை நீங்கள் அருந்தினால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.
நறுமணம் தவழும் கிரீன் டீ:
கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’ எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும். இதனால் பருமன் ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது.
ஸ்ட்ராவ் பெர்ரி ஜுஸ்:
ஓட்ஸ், தயிர், சியா விதைகளை கலந்து ஸ்டாபெரி ஜுஸ் பருகலாம். ஸ்டாபெரியில் உள்ள, லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.
திராட்சை மற்றும் அன்னாசி பழம் கலந்த ஜுஸ்:
திராட்சையும் சரி, அன்னாசி பழமும் சரி, வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை குறையும்.
ஆப்பிளுடன் ஜிஞ்சர் கலந்த ஜுஸ்:
ஆப்பிள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், உடலுக்கு மறு ஆற்றலையும் கொடுக்கும். ஜிஞ்சர், உடலில் உள்ள கொழுப்புகளை எரிப்பதுடன், எளிதான செரிமானதுக்கும் உதவுகிறது.
இஞ்சி கலந்த எலுமிச்சை டீ:
இஞ்சி கலந்த எலுமிச்சை டீயை காலையில் அருந்துவது நல்லது, லங்கப்பட்டையை இந்த டீயில் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும், கொழுப்புகளை எரிக்கும். இந்த டீயில் தேன் மற்றும் இயற்கையான சர்க்கரைகளை கலந்து சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். எடையும் குறையும்.
சாக்லேட் ஷேக்: சாக்கோ பிரியர்களுக்கு அற்புதமான ஒன்று, இதில் காபியை சேர்க்கலாம் இதன்மூலம் உடற்பயிற்சி செய்யும் முன் இதை பருகினால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், , உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். இந்த பானத்தை உடற்பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பருக வேண்டும்.
இளநீர்:
இளநீர் இயற்கையான அற்புதபானம், இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து பொட்டாசியம் என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது அடங்கியுள்ளது. தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் ஏற்பட்டு கொழுப்புகள் வேகமாக கரையும். உ டல் எடையும் அற்புதமாக குறையும்.
இளநீரில் தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. அதேபோல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில் உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது.
கருப்பு காபி (பிளாக் காபி):
கொழுப்பை கரைத்து பிட்டாக இருக்க விரும்புபவர்களுக்கு பிளாக் காபி அற்புதமான எடை குறைப்பு கருவியாக செயல்படும். ஜிம்மிற்கு செல்வதற்கு முன்பு இதை பருகினால் உங்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.