Home பாலியல் உடலுறவுக் கொள்வதற்கு முன்னர் ஏன் சிறுநீர் கழிக்க கூடாது என தெரியுமா?

உடலுறவுக் கொள்வதற்கு முன்னர் ஏன் சிறுநீர் கழிக்க கூடாது என தெரியுமா?

61

உடலுறவில் ஈடுபடும் போது சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலரும் இதை தவறாக புரிந்துக் கொண்டு உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறுநீர் கழித்துவிட்டு வருவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சமீபத்திய ஆய்வில், உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறுநீர் கழிப்பது பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று உண்டாக காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நீங்களாக உடலுறவில் ஈடுபடும் முன்னர் சிறுநீர் கழிக்க முற்பட வேண்டாம் என்றும். சிறுநீர் கழித்த உடனே உறவில் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.

சிறுநீர் குழாய் பாதை தொற்று

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு, சிறுநீர் கழித்துவிட்டு , வருவது தான் சுகாதாரனமான முறை என கருதி வந்தனர். ஆனால், உடலுறவுக்கு முன்னர் சிறுநீர் கழிப்பதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் பாதை தொற்று உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன என சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீர் கழிப்பது தவறு

டேவிட் எனும் சிறுநீரக மருத்துவ நிபுணர், சிறுநீர் கழித்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவது, பெண்ணுறுப்பு வழியாக சிறுநீர் பாதை நோய் தொற்று உண்டாகும் அபாயம் இருக்கிறது என கூறியுள்ளார்.

அறிவுரை உண்மையில்

உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பது தான் நல்லது மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர். மேலும், இது தான் சுகாதாரமானது எனவும், உடல்நலனுக்கு நல்லது எனவும் கூறுகின்றனர். இது நோய் தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.

தொற்று உண்டாகாமல் தடுப்பது எப்படி?

பொதுவாகவே, சிறுநீரை அடக்க வேண்டாம். சிறுநீர் வரும் போது உடனே கழித்து விடுவது தான் நல்லது.

உங்கள் பிறப்புறுப்பை (பெண்கள்) பின் வழியாக கழுவுங்கள். இதனால் சிறுநீர் பாதை தொற்று உண்டாவதை தடுக்க முடியும்.

உடலுறவிற்கு ஈடுபடும் முன்னரும், ஈடுபட்ட பிறகும், உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழியுங்கள். இயல்பாகவே உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் வரும், அதை அடக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.