உடலுறவு என்பது உடல் கட்டுப்பாட்டை தாண்டி, மனதின் கட்டுப்பாட்டை சார்ந்தது. பெரும்பாலும், மனிதர்களால் அடக்க முடியாத உணர்வுகளில் உடலுறவு சார்ந்தவை முதன்மை வகிக்கின்றன. சிலர், உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் வேறுவிதமாக நடந்துக் கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் ஓர் பேரார்வம் இருக்கும். இதனால், உறவில் பல சந்தர்ப்பங்களில் கசப்பான அனுபவம் அல்லது உறவில் இதுவே விரிசல் உண்டாக முக்கிய காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.
இந்த வகையில் உடலுறவில் ஈடுபடும் போது, ஆண்கள் கவனிக்க மறக்கும் 6 விஷயங்கள் பற்றி இனிக் காண்போம்…
விஷயம் #1
சில ஆண்கள் தாம்பத்தியத்தில் வேகமாக / உச்சம் அடைந்து ஈடுபடும் போது, தன் துணை வலியால் துடித்தாலும், கத்தினாலும் கூட அதை கவனிப்பதல்ல. இது, அவர்களை உடலளவிலும், மனதளவிலும் பெருமளவில் பாதிக்கும் செயலாகும்.
விஷயம் #2
உடலுறவில் ஈடுபடும் போது சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இது, பெண்கள் அசௌகரியமாக உணரும் போதலும் கூட சில ஆண்கள் இதை கண்டுக்கொள்வதில்லை.
விஷயம் #3
உடலுறவில் ஈடுபடும் போது தங்கள் துணையின் உடலில் ஏதனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து பெரும்பாலான ஆண்கள் கவனம் செலுத்துவதில்லை. சில சமயங்களில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் உடலுறவில் ஈடுபடும் போது, முந்தைய நாள் செயலால் அந்தரங்க பாகங்களில் ஏதேனும் தாக்கம், காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இதுபற்றி ஆண்கள் பெரிதாய் கண்டுக்கொள்வதில்லை. இது தவறான அணுகுமுறை ஆகும்.
விஷயம் #4
சில ஆண்கள் உறவில் ஈடுபடும் போது, தன் துணை ஏதேனும் செயல்களுக்கு மறுப்பு தெரிவித்தாலும் கூட, அதையும் மீறி தாம்பத்தியத்தில் / அந்த செயலில் ஈடுபடுவது பெண்களை மனதளவில் பெரிதாக பாதிக்கிறது. இதனால், கணவன் மீது தவறான எண்ணம் மனதில் பதிய இது காரணியாக மாறுகிறது.
விஷயம் #5
திடீர் முடிவில் தாம்பத்தியத்தில் ஈடுபட நினைக்கும் ஆண்கள், அவர்களது துணையிடம் ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என அறியாமலே அவர்களை வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட வைப்பது மனதில் உறவு சார்ந்த எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க காரணியாக அமைகிறது.
நிபுணர்கள் கருத்து:
தாம்பத்தியம் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்கள் வரை எல்லா உயிரினங்கள் மத்தியிலும் நடக்கும் இயற்கையான செயல்பாடு. ஆனால், வலுக்கட்டாயமாக, துணை அதில் ஈடுபாடு இல்லாத போது நிர்பந்தப்படுத்தி ஈடுபட நினைப்பது கசப்பான அனுபவத்தை தான் அளிக்கும். மேலும், இது பல சமயங்களில் உறவில் விரிசல் உண்டாக காரணியாக இருக்கிறது என கூறுகின்றனர்.