Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெயிட் குறையணுமா?

ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெயிட் குறையணுமா?

26

உடல்பருமன் உலகம் முழுவதும் இன்றைக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. உடலில் உண்டாகும் ஏராளமான நோய்களுக்கு இந்த உடல்பருமன் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.

உடற்பயிற்சி, ஜிம், டயட் என என்னவெல்லாம் செய்து பார்த்தும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? இனிமேல் அதற்காக ரொம்ப சிரமப்பட வேண்டாம். இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக் கொண்டாலே போதும் உங்கள் உடல் எடை சரசரவெனக் குறைந்துவிடும்.

ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தாலே போதும். ஆனால் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

300 மில்லி தண்ணீர்

1 எலுமிச்சை

60 கிராம் கொத்தமல்லி இலை

செய்முறை

கொத்தமல்லி இலையை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்து 300 மில்லி தண்ணீருடன் கலக்க வேண்டும். அதன்பிறகு ஒரு முழு எலுமிச்சையையும் அதில் பிழிந்து விட்டு, குடிக்க வேண்டும். இந்த ஜூஸை உடனுக்குடன் தயார் செய்து குடிப்பது நல்லது. ஏற்கனவே தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கக்கூடாது.

கொத்தமல்லி இலை தோலுக்கு அடியில் படிந்திருக்கிற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. உடலில் ஜீரண சக்தியைத் தூண்டிவிடுகிறது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகக் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிக்கக்கூடாது. பத்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் குடிக்கலாம்.

உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது.

இந்த ஜூஸை காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இதைக் குடித்தவுடன் எனர்ஜியும் புது்துணர்ச்சியும் கிடைத்தது போன்ற உணர்வு உண்டாகும்.