“மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய விஷயமே இல்லை. ‘அய்யாரி’ இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.
நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன. பட வாய்ப்புக்காக இது போன்று போஸ் கொடுக்கவில்லை”. #RakulPreetSingh