கலவுதல் என்பது உடல் ரீதியான இணைதல் மட்டுமல்ல, உண்மையில் கலவுதல் ஆண், பெண் இருவரையும் மன ரீதியாக நெருக்கமடைய செய்யும் செயல்பாடு என்றே கூற வேண்டும். கலவுதல் என்பது இரு மனமும் சேர்ந்து ஒப்புதலுடன் இணையும் போதே சிறந்த கலவுறவாக அமைகிறது.
யாருடைய மனம் நோகாமலும், உடல் நோகாமலும் மேற்கொள்ளப்படும் கலவுதலே சிறந்தது. இங்கே தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதை காட்டிலும், துணையின் ஆசை மற்றும் உடல் ஒப்புதலுக்கு இணங்க செயற்பட வேண்டியதே அவசியம்.
கலவுதல் மட்டுமே இல்வாழ்க்கையை முழுமையடைய செய்திடாது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், கலவுதல் உறவில் எத்தனை அவசியம் என்றும். அதன் மூலம் கணவன் – மனைவி உறவில் ஏற்படும் நல்ல விளைவுகள் குறித்தும் பெண்கள் என்ன கூறுகிறார்கள் என்று தொடர்ந்து காணலாம்…
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1
கலவுதல் உறவில் அவசியம் தான். ஆனால், கலவுதல் மட்டுமே போதுமானது அல்ல. கலவுதல் உறவில் ஆண், பெண் இடையில் ஒரு ஆரோக்கியமான பாலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக இருவர் மத்தியில் பிரிவு ஏற்படாமல் தடுக்கும் கருவியாகவும் அமைகிறது.
மேலும், கலவுதல் மூலமாக தயக்கமின்றி இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ள வழிவகுக்கிறது. கலவி என்பது தனியாக வைத்து பார்க்கும் போது, அது மட்டும் போதுமா என்ற கேள்வியை எழுப்பும்.
ஆனால், கலவி மூலமாகவும், அதை தொடர்ந்தும், அதன் பின்னணியில் தம்பதியர் இடையே உண்டாகும் நல்ல விளைவுகள் அதிகம் இருக்கின்றன.
#2
கணவன் – மனைவி உறவில் ஒரு நல்ல தோழமை உருவாக கலவுதல் முக்கியமானது. இது வலிமையான உறவை உருவாக்க உதவுகிறது. உணர்வு ரீதியாக நெருக்கத்தை உருவாக்கும் கருவியாக அமைகிறது கலவுதல்.
மனித உயிர்களின் அடிப்படையில் கலவுதல் அவசியமான ஒன்று. வெறும் ஆசையை தீர்த்துக் கொள்ள என்பதை தாண்டி, உடலையும், மனதையும் ஒரு உறவில் சமநிலையில் பேணிக்காக்க கலவுதல் சிறந்ததாக இருக்கிறது.
#3
தம்பதியர் இடையே கலவுதல் சீராக இருந்தால், அவர்கள் உறவு பிரிக்க முடியாததாக இருக்கும். இது அவர்கள் மத்தியில் ஸ்ட்ராங்கான பான்டிங் உருவாகவும். மன ரீதியாக, உடல் ரீதியாக என்றும் விலகாதிருக்க வழிவகை செய்கிறது.
மேலும், கலவுதல் ஒருவரை குறித்து ஒருவர் முழுமையாக அறிந்துக் கொள்ளவும், ஒளிவுமறைவு இல்லாத உறவை நீட்டிக்கவும் பயனளிக்கிறது.
#4
கலவுதல் மட்டுமே ஒரு உறவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுமா என்றால், இல்லை என்பதே பதில். ஆனால், ஆரோக்கியமான கலவுதல் உறவில் இருக்கும் கணவன் – மனைவி இருவரையும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக் கொள்ளவும், மன ரீதியான உறவில் மேலும் இணக்கம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கவும் உதவும்.
நல்ல கலவுதல் உறவில் ஈடுபடும் தம்பதியர் தங்கள் துணை பற்றி நன்கு புரிதல் கொண்டிருப்பார்கள்.
கலவுதல் மூலமாக பல நேர்மறை தாக்கங்கள் உறவில் ஏற்படுகின்றன. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொள்ளவும், உறவில் இருக்கும் நெருக்கத்தை பேணிக்காக்கவும் இது உதவுகிறது.
மேலும், கலவுதல் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண், பெண் உறவை வலிமையடைய செய்கிறது. நல்ல கலவுறவு கொண்டிருப்பவர்கள் நீண்ட காலம் சிறந்த தம்பதிகளாக வாழும் வாய்ப்புகள் அதிகம். இது, அவர்கள் இல்லறத்திலும் மேன்மையடைய உதவுகிறது.