Home பாலியல் பெண்கள் இரண்டு விதங்களில் உச்சநிலை எட்டுகிறார்களாம்… அதில் இரண்டாவது தான் அதிகமாம்.

பெண்கள் இரண்டு விதங்களில் உச்சநிலை எட்டுகிறார்களாம்… அதில் இரண்டாவது தான் அதிகமாம்.

68

உடலுறவின் போது பெண்கள் இரண்டு வகைகளில் உச்சத்தை எட்டுகிறார்கள். ஆனால் அவர்களை எப்படி உச்சமடைய வைப்பது என்பதில் தான் ஆண்களுக்குத்தான் குழப்பமே தவிர, பெண்களுக்கு எப்போதும் அதில் சிக்கல் இருப்பதேயில்லை.

பெண்களுக்குத் தங்களை என்ன செய்தால், தாங்கள் உச்சத்தை எட்டுவோம் என்பது நன்றாகவே தெரியும். பெண்களை ஆறு வகைகளில் திருப்திப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஆறில் பெண்கள் உச்சத்தின் எல்லையைத் தொடுவது இரண்டு வகைகளில் தான். அவை என்ன தெரியுமா?

1. உடலுறவின் வழியாக உச்சத்தை எட்டுவது

2. கிளிட்டோரஸைத் தீண்டி கிளர்ச்சியூட்டுவதால் உச்சத்தை எட்டுவது

பெண்கள் சிலர் நேரடியாக உடலுறவு கொள்வதின் மூலம், உச்சநிலையை அடைகிறார்கள். சிலர் அவர்களுடைய கிளிட்டோரஸ் தீண்டப்படும்போது, அதிக அளவில் கிளர்ச்சியடைந்து உச்சநிலையை எட்டுகிறார்கள். ஆனால் பெண்களின் உச்சநிலையைப் பற்றி ஆண்கள் பெரிதாக தெரிந்து வைத்திருப்பதில்லை. அதனாலேயே பெரும்பாலும் பெண்களை உறவில் திருப்திப்படுத்த முடிவதில்லை.

மிகச்சரியான முறைகளில் தீண்டப்பட்டால் மட்டுமே இந்த முறைகளில் ஏதாவது ஒன்றில் பெண்களை உச்சத்தை எட்ட வைக்க முடியும்.

இந்த இரண்டு உச்ச நிலைகளுக்குமான வித்தியாசம் தெரியாமல் போனால் நிச்சயம் பெண்களைத் திருப்தியடையச் செய்ய முடியாது. இரண்டுக்கும் அப்படியென்ன வித்தியாசம்?

பெண்களுடைய சுகங்கள் அத்தனையும் ஒன்றாகச் சேர்த்து ஒளித்து வைத்திருக்கும் பகுதி தான் இந்த கிளிட்டோரஸ். பெண்களுடைய உடலில் உள்ள 80,000 மேலான நரம்பு முடிச்சுகள் அந்த பகுதியில் தான் சென்று முடிவடைகின்றன. அதனாலேயே பெரும்பாலான பெண்கள் நேரடியாக உடலுறவு கொள்வதைக் காட்டிலும் இந்த முறையில் தான் அதிகம் உச்சநிலையை எட்டுகிறார்கள்.

அடுத்தது நேரடியாக உடலுறவு கொள்வதால் இன்பமடைதல். மூன்றில் ஒரு பெண் தான் இந்த வகையில் உச்சமடைவதாகவும் மீதி இரண்டு பேர் கிளிட்டோரஸை தீண்டி, கிளர்ச்சியூட்டுவதாலேயே இன்பமடைவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்த உடலுறவு முறையில் பெண்களை அவ்வளவு எளிதாகத் திருப்திப்படுத்த முடிவதில்லை. பெண்களுடைய உணர்ச்சிப் பிரதேசம் என்று சொல்லப்படுகிற ஜி- ஸ்பாட்டை கண்டடைந்து, முறையாக உறவில் ஈடுபட்டாலெ் ஒழிய பெண்கள் இந்த முறையி்ல அவ்வளவு சீக்கிரம் உச்சத்தை எட்டுவதில்லை.

இந்த இரண்டு வித்தியாசங்களையும் ஆண், பெண் இருவருமெ தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உறவில் இன்பம் காண முடியும்.