Home ஆரோக்கியம் உங்களுடைய நாக்கினை பார்த்து என்ன நோய் என காணலாம்

உங்களுடைய நாக்கினை பார்த்து என்ன நோய் என காணலாம்

24

நாக்கில் இருக்கும் நிறத்தின் படிவு கொண்டு நம் உடலில் என்ன நோய் என்று கண்டறியலாம்.

சிவப்பு நிறம் : நாக்கில் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் தொற்று நோய் மற்றும் அலர்ஜி உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

இளம் சிவப்பு நிறம் : உங்கள் நாக்கில் இளம் சிவப்பு நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் இதயம் மற்றும் இரத்தம் சம்பந்தமான நோய் உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

மஞ்சள் நிறம் : நாக்கில் மஞ்சள் நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய் உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

காபி நிறம் : நாக்கில் காபி நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் நுரையீரல் பாத்திப்பு உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

சிமெண்ட் நிறம் : உங்கள் நாக்கில் சிமெண்ட் நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் செரிமானம் மற்றும் மூல நோய் உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

வெளிர் வெள்ளை நிறம் : நாக்கில் வெளிர் வெள்ளை நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பில் நீர் வற்றிப் போதல் மற்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்றுக் காய்ச்சல் உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.

ரோஸ் நிறம் : நாக்கில் ரோஸ் நிற படிமம் படிந்து இருந்தால் உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கின்றது என்று அர்த்தம்.