antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videosநிலவின் குளுமையும் தென்றலின் சிலுசிலுப்பும் இரவு நேரத்தில் உணர்வுகளை வேகப்படுத்தும். அதனால்தான் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம் முந்தைய தலைமுறைகளிடம் இருந்தது. இன்றைக்கு எத்தனை குடும்பங்களுக்கு இரவு நேரத்து நிலவும், குளுகுளு தென்றலும் துணையிருக்கின்றன? இயந்திரத்தனமான வேலைப்பளுவுடன் வீட்டுக்குத் திரும்பி, சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு, இரவு உணவை சாப்பிட்டுவிட்டு, படுக்கையை விரித்து குறட்டை விடுவது வழக்கமாகி வருகிறது. இந்த அவசரகதி என்பது, அடுத்தநாள் வேலைக்கு உதவியாக இருக்கும். ஆனால், நீண்டகால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இதுதான் எமன்.இரவின் சுகத்தை உணர்வுகளால் அனுபவிக்கத் தெரிந்தவர்கள், பகல்பொழுதில் சுறுசுறுப்பாகப் பணியாற்றி முன்னேறும் இயல்பைப் பெற்றுவிடுவார்கள். படுத்ததும், கண் மூடி குறட்டையில் ஆழ்ந்துபோதல் என்பது ஒருவித நோயின் அறிகுறி. அலுவலக மேசை போல படுக்கையறையும் கவனத்திற்குரியது. நல்ல காற்றோட்டம் (அது ஏ.சியின் துணையிலும் கிடைக்கலாம்), சுகந்த மணம் வீசும் அறைத் தெளிப்பு(ரூம் ஸ்பிரே), மனதுக்கு இதம் தரும் மென்மையான இசை, அருகில் இருக்கும் துணையின் முகம் தெரிந்தும் தெரியாதபடியான மங்கலான ஒளியில் விளக்குகள் . ஒரு படுக்கையறைக்கான லட்சணங்கள் இவை.
எல்லா நாட்களும் மெத்தை மீது தாம்பத்யத்தில் முழுமை கண்டுவிட முடியாது. ஆனால், சின்னச் சின்ன தொடுதல்கள் எல்லா நாட்களிலும் சாத்தியமானது. இந்தத் தொடுதல் உருவாக்கும் நெருக்கத்தால் ஏற்படும் அரவணைப்பில், வெளியில் நிலவுகின்ற குளிரையோ புழுக்கத்தையோ உடல்கள் அறிவதில்லை. உள்ளங்கள் ஒன்றாகும்போது உலகங்கள் மறந்துபோகும்.