Home பெண்கள் பெண்குறி அந்தரங்க உறுப்பு அப்படி இப்படி இருக்குதா? கவலையை விடுங்க!

அந்தரங்க உறுப்பு அப்படி இப்படி இருக்குதா? கவலையை விடுங்க!

45

பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும், அதன் விளைவாக உறவில் நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு.
இதனால் மனரீதியாக சிக்கல்களுக்கும் ஆளாவதுண்டு. இந்த தளர்வினை எளிதாக சரி செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கெகெல் எனப்படும் பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டாக்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சிதான் இது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.

ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமிகள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக்டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம். உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்புறுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்கமான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர்களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொற்று வர வாய்ப்புண்டாம்.

பல பெண்களையும் தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங்க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமான உடை போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப்பின் உள்ளே அரிப்பிருந்தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.

மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிற மாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறிய கொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏதேனும் வித்தி யாசங்களை உணர்கிற பட்சத்தில் அது உடனடியாக மருத்துவப் பரி சோதனைக்குட்படுத்தப் பட வேண்டும்.

ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல்லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செயற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் வசதிகள் பெருகிவிட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாமல் போனாலும், அவர்களது செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.