Home பெண்கள் அழகு குறிப்பு இந்த டைம் டேபிள் படி சாப்பிட்டால் எடை அற்புதமாக குறையும்

இந்த டைம் டேபிள் படி சாப்பிட்டால் எடை அற்புதமாக குறையும்

35

நீங்கள் சாப்பிடும் முறையும், சாப்பிடும் அளவும் தான் உங்களின் எடையை தீர்மானிக்கிறது. உடற்பயிற்சி செய்யும் அதே வேளையில் எப்படி தினசரி உணவை உட்கொள்வது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் எடையை எப்படி குறைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பதை நீங்கள் அறியலாம்.

காலையில் சாப்பிடும உணவு அரசன் என்றால், மதியம் சாப்பிடும் உணவை இளவரசன் என்று அழைக்கலாம், இரவு சாப்பாட்டை பிச்சைக்காரன் என்று கூறலாம். ஏன் என்கிறீர்களா.

அதற்கான காரணங்களை பார்க்கலாம்

காலையில் பெரும்பாலானோர் அதிகாலையில் எழுவதை பழக்கமாக கொண்டவர்கள் இல்லை. இதனால்தான் என்னவோ பெரும்பாலோர் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். அலுவகத்திற்கு செல்ல வேண்டிய அவசரம் உள்பட பல காரணங்களை இதற்காக அவர்கள் கூறலாம். ஆனால் காலை உணவை தவிர்ப்பதை தவறாகும்.ஏனெனில் இரவு சாப்பாடு சாப்பிட்டிருப்பதால், பசிக்காது என்று எண்ணி, மொத்தமாக மதியம் சாப்பிட செல்வோம். அப்போது ஒரு கட்டு கட்டுகிறார்கள். அதிக பசி காரணமாக நிறைய சாப்பிட்டுவிடுகிறாம்.
இதனால் அன்று முழுவதும் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருவித மந்தமான நிலையை மதியத்திற்கு பிறகு இருக்கும். எனவே காலை உணவை சாப்பிடுவதை தவிர்க்க கூடாது.

நீங்கள் காலை எழுந்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் காலை உணவை முடித்துவிட வேண்டும். இது தான் சாப்பிட சரியான தருணம். காலை இரண்டு – மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. காலையில் அதிக அளவு உண்ணுவதோ, அறவே உணவைத் தவிர்ப்பதோ கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். காலையில் பால், முளைகட்டிய பயறு வகைகள், பழங்கள், எளிதில் செரிமானமாகும் கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது அவசியம்.

அதன் பிறகு 4 மணி நேரத்தில் மதிய உணவு சாப்பிட வேண்டும். பொதுவாக பிற்பகல் 1 மணிக்குள் மதிய சாப்பாட்டை சாப்பிட வேண்டும். நீங்கள் மதிய உணவை நேரம் தவறி சாப்பிடும் காரணத்தால், உடலில் சர்க்கரை அளவு குறையும். மதியம் ஒரு கப் சாதம் (200 கி), ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், அரை கப் தயிர், இரண்டு கப் காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய்,அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இதேபோல் உறங்குவதற்கு குறைந்த பட்சம் மூன்று மணி நேரத்திற்கு முன்பே டின்னரை முடித்துவிட வேண்டும். அப்போது தான் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுவதற்கு எளிதாக இருக்கும். எனவே செரிமானம் ஆக கடினமாக இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறைந்த அளவிலான உணவை எடுத்துக்கொண்டால் நன்றாக உறக்கம் வரும். இரவு வேளையில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் குறைவாகச் சேர்க்கப்பட்ட சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் எவ்வளவு கலோரி தேவை:

தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 2,500 கலோரிகள்.

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு 2,000 கலோரிகள்.

எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு 1,500 கலோரிகள்

குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒன்று அல்லது இரண்டு கிலோ எடையை சீராகக் குறைத்துவருவது நல்லது. அதிக உடல் பருமன் இருப்பவர்கள் மட்டும் மாதம் 2.5-4 கிலோ எடையை குறைக்கலாம்.