அழகான தொடை பெற வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு தான் இதன் மீது அதிக நாட்டம் இருக்கும். வயிற்று கொழுப்பிற்கு அடுத்தபடியாக தொடையில் உள்ள கொழுப்பை கரைப்பதுதான் மிகவும் கடினமானது. தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க சில தகவல்கள்:
ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொடையில் உள்ள கொழுப்பை கரைக்கும்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒரே உடற்பயிற்சியை மட்டும் செய்து கொண்டிருக்கக் கூடாது. மாறாக வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால்தான், தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும்.
தினமும் காலையில் எழுந்து வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தொடையில் உள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்கலாம். மேலும் அலுவலகம் அருகில் இருந்தால், ஆட்டோ, வேன் போன்றவற்றில் செல்லாமல், நடந்து சென்றால், தொடையில் உள்ள கொழுப்பு குறைவதுடன், கால்களும் வலுவுடன் இருக்கும். எப்போதும் லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலமும் தொடையில் உள்ள கொழுப்புக்கள் குறைய ஆரம்பிக்கும்.
மேலும் நவீன உலகத்தின் அடையாளமாக தற்போது இருசக்கர வாகனங்கள் பல்வேறு வகையில், வண்ணங்களில் வந்து விட்டது. இவை லோன் மூலமும் கிடைக்கிறது. இதனால் தற்போது டூவீலர் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. இதனால் சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் தொடைகளில் கொழுப்புக்கள் தங்க ஆரம்பித்துவிட்டது. எனவே பைக்கை அதிகம் பயன்படுத்தாமல், அவ்வப்போது சைக்கிளையும் பயன்படுத்த வேண்டும்.
தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகளில் ஒன்றுதான் ஓடுவது. இத்தகைய ஓட்டத்தை வெளியே காற்றோட்டமாக சுத்தமான காற்றினை சுவாசித்தவாறே மேற்கொள்வது சிறந்தது. யோகாசனத்தில் தொடையை குறைப்பதற்கு என்று ஒருசில ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் கூட தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும். சிறுவயதில் விளையாடிய ஸ்கிப்பிங் கூட தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு உதவி புரியும். தண்ணீர் அதிகம் குடித்தால், உண்ணும் உணவில் அளவு குறைந்து கொழுப்புக்கள் அதிகரிப்பது குறைவதுடன், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களும் குறையும்.