மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும்போது, அதாவது பூப்படையும் பருவத்தில் மார்பகம் வளரத் தொடங்கும்.கருத்தரித்த பிறகு, குழந்தைக்கான பால் இங்குதான் சுரக்கிறது.
உடலுறவின்போது மார்பகத்தைத் தொட்டால் உணர்ச்சி அதிகரிக்கும்.பெண்ணின் பிறப்புறுப்பை ஈரமாக்கி உடலுறவுக்குத் தயார்படுத்துகிறது.
மார்பகத்தின் உள்பக்கம் இருக்கும் சுரப்பிகள், குழந்தைக்கான பாலைச் சுரக்கின்றன. அந்தப் பாலை, மார்பகக் காம்புக்குக் கொண்டு செல்பவை, சுரப்பிக் குழாய்கள். மார்பகக் காம்பின் வழியே பால் வெளிவரும்.சிலசமயங்களில், இது விறைத்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். சிலசமயங்களில், இது தட்டையாக, மடிந்துபோய் இருக்கும். மார்பகக் காம்பைச் சுற்றி இருக்கும் கறுத்த மேடான பகுதி, மார்பு கறுவட்டம் (Areola) எனப்படுகிறது.
கறுவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்பகக் காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன