சிலருக்கு என்னதான் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், வயிற்றுக்கு அடுத்தபடியாக தொடையில் அதிக சதை போடும். தொடை பெரிதாக இருந்தால், ஜீன்ஸ் போட்டால் அழகாக இருக்காது, போடுவதற்கும் சற்று சிரமமாக இருக்கும்.
எனவே தொடையில் உள்ள சதையினை குறைப்பதற்கு, சில உடற்பயிற்சிகளையும், உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் செய்யவேண்டியவை
தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது, தினமும் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உடலுக்கு வேண்டிய போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும்.
அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்து, அடிக்கடி சிறு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
அன்றாட உணவுகளில் மிளகாயை சேர்த்து உட்கொண்டு வருவதன் மூலம், தொடை மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். இதற்கு மிளகாயில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.
நீச்சல் அடிப்பதன் மூலம், தொடையில் மட்டுமின்றி, உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள கொழுப்புக்களை கரைக்கலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நீச்சல் மிகவும் சிறந்த உடற்பயிற்சி.
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.
சிட்ரஸ் பழங்களை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சிட்ரஸ் அமிலம், கொழுப்புக்கள் வேகமாக கரைய உதவும். மேலும் ஸ்நாக்ஸ் நேரங்களிலும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தொடை சிக்கென்று இருக்கும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் போதுமான ஆற்றலை வழங்கி, ஒருவரை சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.