Home பெண்கள் பெண்குறி தொடை இடுக்கில் கருமை அதிகமாக இருக்கிறதா? அதை இப்படியும் போக்கலாம்

தொடை இடுக்கில் கருமை அதிகமாக இருக்கிறதா? அதை இப்படியும் போக்கலாம்

129

captureபெரும்பாலானவர்களுக்கு அக்குள், தொடையின் உள்பக்கம், முழங்கால் ஆகிய பகுதிகள் மட்டும் உடலின் மற்ற இடங்களைக் காட்டிலும் கருமையாக இருக்கும். குறிப்பாக, தொடையிடுக்குகளில் உள்ள கருமை பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னை. அதற்குத் தீர்வு தான் என்ன?

அதிகப்படியான வெயிலில் வெளியே செல்லாதீர்கள். வெயிலில் செல்லும் போது சருமத்தை விடவும் மறைக்கப்பட்ட பகுதிகள் அதிகமாக கருமையாகக் காரணம், வெயிலில் உண்டாகும் வேர்வை காற்று புகாத மறைவிடங்களில் அப்படியே தங்கிவிடும். அந்த அழுக்குகள் அப்படியே சருமத்துக்குள் படிந்து போய் தோலை கருமையாக்கிவிடுகிறது.

இது சில சமயங்களில் பூஞ்சைத் தொற்றாகக் கூட இருக்கும் வாய்ப்புண்டு. இதற்கு மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படும்.

மஞ்சளை சிறிது பால், சிறிதளவு ஆரஞ்சு தோல் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து பேஸ்ட்டாக்கி, கருமையாக உள்ள உள் தொடைப்பகுதிகளில் தடவவும். அரை மணி நேரம் வரையிலும் நன்கு உலர விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

அதேபோல் தேனும் இதற்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
ஒரு எலுமிச்சையின் சாறினை எடுத்து, அதனுடன் தேன் கலந்து கருப்பான இடத்தில் தடவவும். நன்கு உலரவிட்டு பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவலாம்.

இதேபோல் வாரத்துக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.