Home ஆண்கள் ஆண்களே! இந்த உணவுகள் உங்களது விந்தணுக்களை அழிக்கும் என்பது தெரியுமா?

ஆண்களே! இந்த உணவுகள் உங்களது விந்தணுக்களை அழிக்கும் என்பது தெரியுமா?

35

boy-1தற்போதைய ஆண்கள் அதிக கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக விந்தணு குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டைத் தடுக்க ஆண்கள் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். மேலும் விந்தணுவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேடி உணவில் சேர்த்து வருகின்றனர்.

ஆனால் ஆண்கள் அவர்களை அறியாமலேயே சாப்பிடும் சில உணவுகள் அவர்களது விந்தணுக்களை அழிக்கும் என்பது தெரியுமா? ஆம், அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சோயா பொருட்கள் ஆண்கள் சோயா மற்றும் சோயா பொருட்களை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதனால் அவர்களின் பாலியல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுவும் டெஸ்டோஸ்டிரோன் அளவில் ஏற்றத்தாழ்வுகள், பாலுணர்ச்சி, விந்தணு எண்ணிக்கை மற்றும் கருவளத்தின் அளவுகளில் குறைவு ஏற்படும். ஆகவே இந்த பொருட்களை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வறுத்த உணவுகள் வறுத்த உணவுகளில் உள்ள ஹைட்ரோஜினேட்டட் கொழுப்புகள், டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் குறைவை ஏற்படுத்தும் மற்றும் விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தைக் குறைக்கும். ஆகவே எண்ணெயில் வறுத்த உணவுகளை ஆண்கள் அதிகம் சாப்பிடக்கூடாது.

காபி காபியை அதிகமாக ஆண்கள் பருகினால், அதில் உள்ள காப்ஃபைன், விந்தணு எண்ணிக்கை மற்றும் அடர்த்தியைக் குறைக்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆண்களே! உங்களுக்கு குழந்தை வேண்டுமானால், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்த்திடுங்கள். ஆய்வு ஒன்றில், எந்த ஒரு ஆண் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தொடர்ந்து உட்கொண்டு வருகிறாரோ, அவரிடம் மற்ற ஆண்களை விட குறைவான அளவிலேயே ஆரோக்கியமான விந்தணுக்கள் இருப்பது தெரிய வந்தது.

ஆல்கஹால் ஆல்கஹால் விந்தணுவின் தரம் மற்றும் எண்ணிக்கை என இரண்டையும் பாதிக்கும். மேலும் ஆல்கஹால் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்த நிலையை அதிகரித்து, ஆண்மையின்மையை உண்டாக்கிவிடும். ஆகவே மதுவை முடிந்த வரை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

சோடா பானங்கள் சோடா பானங்களிலும் ஆண்களின் விந்தணுவை பாதிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே சோடா பானங்கள் பருகும் பழக்கம் இருந்தால், உடனே அவற்றைத் தவிர்த்திடுங்கள்.