இங்க திருநங்கை என தெரிந்தும் மணந்த காதலன், மனதை உருக்கும் காதல் கதை மற்றும் அவர்களின் அட்டகாசமான புகைப்பட தொகுப்பு பகிரப்பட்டுள்ளது.
காதலுக்கு கண்களில்லை என்பார்கள். காதலுக்கு எல்லையும் இல்லை. இதோ! முதல் திருநங்கை திருமணத்திற்கு இந்தியா சாட்சியாக அமைந்துள்ளது. இதுபோன்ற காதல் திருமணம் அழகை தாண்டிய ஒரு நிகழ்வு. இதோ, மும்பையில் நடந்த இந்தியாவின் முதல் திருநங்கை திருமண தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படங்கள்…
முதல் திருமணம்! இந்தியாவில் இதுவே முதல் திருநங்கை திருமணம் ஆகும். மாதுரி மற்றும் ஜே ஷர்மா இருவரும் தங்களில் ஒருவர் திருநங்கை என்பதை வெளிப்படையாக கூறி திருமணம் செய்துக் கொண்டனர்.
அனு பட்நாயக்! பிரபல புகைப்பட கலைஞி அனு பட்நாயக் இந்த அற்புத காதல் கதையை படம்பிடிக்க விரும்பினார். அதற்கு அந்த தம்பதியினரும் ஒப்புக் கொண்டனர்.
உடன் தங்கி… அனு அந்த தம்பதிகளுடனே தங்கி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். சில நாட்கள் அவர்களுடன் தங்கி லைவ்லியான முறையில் படங்களை எடுத்துள்ளார் அனு.
அனு கூறுகையில்… இது குறித்து அனு கூறுகையில், ” நான் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமான தருணங்களை படமெடுக்க எண்ணினேன். காதலுக்கு பாலினமும் தடையல்ல, எந்தவிதமான எல்லையும் இல்லை என்பதை இந்த உலகிற்கு காண்பிக்க விரும்பினேன்.” என கூறியுள்ளார்.
கற்க வேண்டும்! மேலும், அனு இந்த தம்பதியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
அளவற்ற காதல்! மாதுரி மீதான ஜேவின் காதல் மிகவும் ஆழமானது. அது தான் இந்த தம்பதியை தனித்துவமாக சிறப்பாக உணர வைக்கிறது.
தைரியம்! மாதுரியை தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை திருமண சான்றிதழ் பெற தூண்டுவதற்கு போராடுவதற்கு தைரியத்தை அளித்துள்ளது இந்த திருமணம். அதற்கு காரணம் ஜே. ஜேவின் காதல் தான் மாதுரியின் தைரியம்.
தனித்துவ காதல்! இந்த உலகம் இந்த தனித்துவமான காதலை உணர வேண்டும், காண வேண்டும் என எண்ணிய அனு பட்நாயக்கிற்கு தனி பாராட்டுகளை அளித்தே ஆகவேண்டும்.