பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு குண்டாகிவிடுகிறார்கள். அதே பெண்கள் குழந்தை பிறந்த பின் இன்னும் அதிக எடை கூடிவிடுகிறார்கள்.அதற்குக் காரணம் தான் என்ன?
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நிகழ்த்தப்பட்டது. இந்த ஆய்வில் சில முடிவுகள் கிடைத்தன.
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் பத்து ஆண்டுகளில் கூடுதலாக பத்து பவுண்டும், திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் 20 பவுண்ட் வரையும் எடை கூடுகிறார்கள்.
ஒரு பெண்ணின் எடை அதிகரிப்பு குழந்தை பிறந்த பின்பு தான் துவங்குகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு எடை அதிகரிக்கிறது. அதே பெண் இரண்டாம் குழற்தை பெறும்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகிறது.
இது முதல் குழந்தை பிறந்தபோது கூடிய எடையை விட, இப்போது கூடுவது சற்று குறைவு தான்.
உடல் எடை அதிகரிப்பு இயல்பாகவே நடக்கிறது என்றாலும் இந்த கூடுதல் எடை தான். அது ஆரோக்கியப் பிரச்னையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் தான் உடல் எடை கூடுவது அதிகமாகிறது.
அதற்குக் காரணம் அவர்களுக்கு வேலைகளுக்கு நடுவே சற்று ஓய்வெடுக்க வேண்டுமெனத் தோன்றினால் உடனே படுத்து தூங்கிவிடுகிறார்கள்.
நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது
நேரத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் குடும்பத்தை கவனிப்பதிலேயே முழு நேரத்தையும் செலவிடுவது
போன்ற பல காரணங்களால் திருமணத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரித்துவிடுகிறது.