Home சூடான செய்திகள் உடலின் அந்தரங்களில் ஜெயம்ரவி உருவத்தை பச்சை குத்திய த்ரிஷா

உடலின் அந்தரங்களில் ஜெயம்ரவி உருவத்தை பச்சை குத்திய த்ரிஷா

40

நடிகர் ஜெயம் ரவியின் உருவத்தை உடம்பு முழுக்க பச்சை குத்தியுள்ளார் த்ரிஷா. முதல்வரியை படிச்சிட்டு கற்பனையை அலைய விடாதீங்க. ஜெயம் ரவி, த்ரிஷா நீண்ட நாட்களாக நடித்து வரும் பூலோகம் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதில் த்ரிஷா ஜெயம் ரவியின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டு ஆடுகிறார். தோள், கழுத்து, தொடை, கைகளில் பச்சை குத்தி ஆடியிருக்கிறார். இந்த ஐடியா பிறந்த கதையும், பாட்டு பிறந்த கதையையும் இப்படிச் சொல்கிறார் படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்…

“கதைப்படி த்ரிஷா பாக்சிங் கோச்சர். அதே நேரத்துல விதவிதமா டாட்டு குத்திக்கிற அல்ட்ரா மார்டன் பொண்ணு. இரண்டு பேருக்குமான சாங்கில் இந்த டாட்டு ஐடியாவை வைக்க முடிவு பண்ணினோம். தற்காலிகமாக டாட்டு குத்திக்கிட்டு சில மணி நேரத்துல அதை அழிச்சிடுற மாதிரியான ஒரு டெக்னிக்கை கண்டுபிடிச்சு, அதை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகிட்ட ட்ரை பண்ணிப் பார்த்துட்டு அப்புறமாத்தான் த்ரிஷாகிட்ட விஷயத்தை சொன்னோம். உடனே ஓகே சொல்லிட்டார்.
மூன்று மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து டாட்டு குத்திக்கிட்டு நடிச்சார். அப்புறம் அதை அழிக்கிறதுக்கு 3 நேரம் பொறுமையாக இருந்தார். இப்படியே நாலு நாட்கள் நடிச்சுக் கொடுத்தார். பாட்டு தீம் படி தன் உடம்புல ஒவ்வொரு பகுதியில குத்தியிருக்கிற டாட்டுவை ஜெயம் ரவிகிட்ட காட்டிக்கிட்டே வருவார். சென்சார் அனுமதிக்கிற வரையிலான பகுதி டாட்டுகளை ஜெயம்ரவியும் படம் பார்க்கிறங்களும் பார்க்கலாம். அனுமதிக்காத பகுதியை… அந்த ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க” என்கிறார் கல்யாண கிருஷ்ணன்.