Home ஆரோக்கியம் சிறுநீர் எப்படி இருக்கிறதோ அதே போன்றுதான் உடல்நலமும்

சிறுநீர் எப்படி இருக்கிறதோ அதே போன்றுதான் உடல்நலமும்

50

சிறுநீர் பிரச்னை,..உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.

பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.

எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்…

உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.

சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.