தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி – 1 கிலோ
பாசுமதி அரிசி – 2 கப்
எண்ணெய் – 5 அல்லது 6 தேக்கரண்டி
நெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு பல் – 4 அல்லது 5
பச்சை மிளகாய் – 3, 4
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் – 1 முழு கப்
பிரின்ஜி இலை – 1
சீரகம் – ண தேக்கரண்டி
இலவங்கப்பட்டை – 2
கிராம்பு – 2, 4
ஏலக்காய் – 2
மஞ்சள் தூள் – ண தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 ண தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 ண தேக்கரண்டி
விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி
தயிர் – ட கப்
உப்பு சுவைக்கேற்ப
செய்முறை:
ஆட்டிறைச்சி துண்டுகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில், ண தேக்கரண்டி உப்பு, ண தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ண தேக்கரண்டி சிவப்பு மிளகாய்தூள் இவை அனைத்தையும் ஆட்டிறைச்சியுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
இதை 4 முதல் 5 விசில் வரை விடவும்.
இப்போது வேக வைத்த ஆட்டிறைச்சி தயார். ஆட்டிறைச்சி வேகவைத்த தண்ணீரை வடித்துக் கொண்டு, ஆட்டிறைச்சியை தனியாக வைத்துக் கொள்ளவும். (வடிகட்டிய தண்ணீரில் நமக்கு தேவை என்றால் மிளகு தூள் சேர்த்து சூப் போல குடிக்கலாம், இது நன்கு ருசியானது மற்றும் ஆரோக்கியமானது).
இப்போது பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசியை சுத்தம் செய்து 5 முதல் 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து கொள்ளவும்.
இப்போது தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
நன்றாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா இலைகள் இவற்றை தயாராக வைத்திருக்கவும்.
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை மிக்சியில் போட்டுக் கொள்ளவும்.
தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் 1 நிமிடம் அரைக்கவும்.
ஒன்றிரண்டாக அரைத்த இந்த கலவையை தனியாக ஒரு கப்பில் தயாராக வைக்கவும்.
இப்போது ஒரு பெரிய கடாயை சூடுபடுத்திக் கொள்ளவும்.
இதில் எண்ணெய் 5 அல்லது 6 டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
எண்ணெய் சூடானதும் ப்ரின்ஜி இலை, சீரகம், இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கவும்.
இவை எல்லாம் வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
கொத்தமல்லி இலைகள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
18. இப்பொழுது அரைத்த விழுதை (படி 12ல் உள்ள) சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
19. இறுதியாக நறுக்கிய தக்காளி மற்றும் உப்பை சேர்க்கவும்.
20. இதை 6 முதல் 8 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வதக்கவும்.
21. எண்ணெய் மசாலாவில் இருந்து பிரியும் வரை வதக்கிய பின், இதனுடன் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1 ண தேக்கரண்டி கரம் மசாலா தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
22. பின் தயிரை சேர்க்கவும்.
23. இப்போது வேகவைத்த ஆட்டிறைச்சி துண்டுகள் மற்றும் ஆட்டிறைச்சி வேகவைத்த தண்ணீர் ண கப் சேர்க்கவும் (படி 4 ல் குறிப்பிட்டுள்ள) / (நீங்கள் கோழி பிரியாணி செய்வதாக இருந்தால், கழுவிய கோழி துண்டுகளை சேர்த்தால் போதும்)
24. இதை 3 முதல் 4 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
25. இப்போது பாசுமதி அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும்.
26. இப்போது 3 ண கப் தண்ணீர் சேர்க்கவும்.
27. சுவையை சரிபார்த்து உப்பு சேர்க்க வேண்டுமென்றால் சேர்க்கவும் மற்றும் வேறு என்ன தேவையோ அதையும் சேர்க்கவும்.
28. இப்போது முழு சூட்டில் குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு இதை அப்படியே 5 முதல் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைக்கவும்.
29. விசில் முழுவதும் போன பிறகு குக்கர் மூடியை திறக்கவும்.
30. கரண்டியால் பிரியாணியை மெதுவாக கிளறி கலக்கவும்.
31. புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவவும்.
32. இப்போது சுவையான திண்டுக்கல் ஆட்டிறைச்சி பிரியாணி தயார்.