சூடான செய்திகள்:ஆணும், பெண்ணும் புரிந்து கொள்ளுதல், அக்கறை, அன்பு உள்ளிட்டவை அந்த உறவுகளை நீண்ட காலம் கொண்டு செல்கின்றன. சின்ன சின்ன விஷயங்களால் கூட நமது உறவு மிகவும் நெருக்கமாகிறது. அவ்வாறான வாழ்வை அழகாக்கும் சின்ன சின்ன தருணங்களை இங்கே காணலாம்.
சின்ன சின்ன விஷயங்களால் நெருக்கமாகும் உறவுகள்; இதையும் ட்ரை பண்ணலாமே…!
காலையும், மாலையும் கொண்டாடுதல்:
நம்முடைய பார்ட்னருக்கு காலையும், மாலையும் ஒரு சிறிய குறுந்தகவலை அனுப்புவதால் அந்த பொழுது புத்துணர்ச்சி பெறுகிறது. அதனோடு அழகிய கருத்துக்கள் கொண்ட அன்பு வார்த்தைகளை அனுப்பினால், உறவு நெருக்கமாகும் என்பதில் சந்தேகமில்லை.
சின்ன சின்ன விஷயங்களால் நெருக்கமாகும் உறவுகள்; இதையும் ட்ரை பண்ணலாமே…!
தேவைக்கு கைக் கொடுத்தல்:
வாழ்வின் கடினமான தருணங்களில் நம்முடைய பார்டனருக்கு உரிய ஆலோசனைகளும், அரவணைப்பும் நிச்சயம் அவசியம். அதனை சக மனிதராக, அவரோடு வாழும் கணவனோ அல்லது மனைவியோ அல்லது காதலனோ அல்லது காதலியோ அளித்தால் சிறப்பாக அமையும்.
சின்ன சின்ன விஷயங்களால் நெருக்கமாகும் உறவுகள்; இதையும் ட்ரை பண்ணலாமே…!
ஒன்றாக பயணித்தல்:
ஒன்றாக பயணிப்பது ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்து கொள்ள பயன்படுகிறது. பல்வேறு சூழல்களை எவ்வாறு கையாள்வது மற்றும் நம்முடைய திறன்களை அறிய முடியும். பயணங்கள் நினைவுகளாக காலந்தோறும் நம்முடனே பயணிக்கும்.
சின்ன சின்ன விஷயங்களால் நெருக்கமாகும் உறவுகள்; இதையும் ட்ரை பண்ணலாமே…!
சரியான வார்த்தைகளை உபயோகித்தல்:
சரியான சூழலில் சரியான வார்த்தைகளை உபயோகித்தால் அது நம்பிக்கைக்கு ஆதாரமாக அமையும். முதலில் நமது அன்பை, அக்கறையை பார்ட்னருக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களால் நமது வாழ்வு எவ்வளவு அழகாக மாறியுள்ளது என்று புரிய வைக்க வேண்டும். எப்போதும் கொடுத்த வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும். வாக்குறுதிகளை மறந்து விடுவது மிகவும் தவறு.
சின்ன சின்ன விஷயங்களால் நெருக்கமாகும் உறவுகள்; இதையும் ட்ரை பண்ணலாமே…!
நாள் முழுவதும் இணைந்திருங்கள்:
குறிப்பிட்ட கால இடைவெளியில் நமது பார்டனருக்கு குறுந்தகவலோ, தொலைபேசி அழைப்போ விடுத்து நமது அக்கறையை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம் நமது சிந்தனை அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது என்று எண்ண வைக்கும்.