குதவழி உடலுறவு என்றால் என்ன? (What is anal sex?)
பிட்டம் (ஆசனவாய்) சம்பந்தப்பட்ட எந்தவொரு பாலியல் செயல்பாடும் குதவழி உடலுறவு அல்லது மலக்குடல் உடலுறவு எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய உடலுறவில் பின்வரும் செயல்கள் செய்யப்படும்:
ஆசனவாயில் ஆணுறுப்பை நுழைத்தல்
ஆசனவாயில் செக்ஸ் பொம்மைகள் அல்லது விரல்களை நுழைத்தல் (சுய இன்பம்)
நாக்கு அல்லது வாயினால் ஆசனவாயைத் தூண்டுதல் (ரிம்மிங்)
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்கள் என்னென்ன? (What are the health risks of anal sex?)
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்கள் பின்வருமாறு:
ஆசனவாய் பாதிப்படைதல்: குதவழி உடலுறவால் ஆசனவாயின் அகவுறை எளிதில் சேதமடையக்கூடும். குதவழி ஊடுருவல் ஆசனவாய் திசுக்களை கிழித்து, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மூலம் தொற்றை ஏற்படுத்தி அதை பாதிப்படையச்செய்யும். லூப்ரிகண்ட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிழிவதை தவிர்க்கலாம், இருப்பினும் எல்லா நேரத்திலும் கிழிவதைத் தடுப்பதில் அவை செயல்திறன் கொண்டவையாக இருப்பதில்லை.
ஆசனவாயின் சுருக்குத்தசை பாதிப்படைதல்: ஆசனவாயானது மலத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதில் வளையம் போன்ற ஓர் தசையமைப்பு உள்ளது அது மலத்தை வெளியேற்றிய பின்னர் மூடிக்கொள்ளும். குதவழி ஊடுருவல் அதை சேதப்படுத்தும், மேலும் மலத்தைப் பிடித்து வைத்துக்கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்கள்: ஆசனவாய் முழுதும் பாக்டீரியாக்கள் உள்ளது. குதவழி உடலுறவானது அதில் ஈடுபடுபவர்களுக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்களை ஏற்படுத்தும். பின்வரும் பால்வினை நோய்கள் குதவழி உடலுறவின் மூலமாக எளிதில் பரவும்:
ஹெப்படைட்டஸ் B: இந்த வைரஸ் எச்சில், விந்து மற்றும் மலத்தில் காணப்படும். இது பாலியல் தொடர்புகள் மூலம் பரவுகிறது.
ஹெப்படைட்டஸ் A: வாய்க்குழி மலத்தால் மாசடையும்போது இது பரவலாம்.
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (HSV): HSV1 மற்றும் HSV2 வைரஸ்கள், சிராய்ப்புகள் அல்லது அதிர்ச்சியினால் சேதமடையும் தோலின் மேல்புறச்செல் அல்லது சீதச்சவ்வு பரப்புகளில் எளிதில் உள்நுழையும்.
சிபிலிசு: பாதுகாப்பற்ற குதவழி உடலுறவால் எளிதில் இது பரவலாம்.
எச். ஐ. வி: பாதுகாப்பற்ற குதவழி உடலுறவானது எச். ஐ. வி பரவுவதற்கு முதன்மை காரணத்தில் ஒன்றாகும்.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், கொனோரியா, கிளமீடியா, ஹேமோபிலிசு டுக்ரீயி, சால்மோனெல்லா, ஷிகல்லா மற்றும் பிற குடல்நோய் தொற்றுகள் குதவழி உடலுறவுடன் தொடர்புடையதாகும்.
குதவழி உடலுறவும் கர்ப்பமும் (Anal sex and pregnancy)
குதவழி உடலுறவால் கர்ப்பம் ஏற்படாது என்ற நம்பிக்கையில் பலரும் அதில் ஈடுபடுகின்றனர். எனினும், விந்து யோனியில் சிந்தி வேற்றுப்பாலின ஜோடிகளுக்கு கர்ப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்களை எப்படித் தவிர்ப்பது? (How to avoid the health risks of anal sex?)
பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்தவும்.
குதவழி உடலுறவிற்குப் பின் வாய்வழிப் புணர்ச்சி அல்லது இயல்பான உடலுறவில் ஈடுபட வேண்டுமெனில் புதிய ஆணுறையைப் பயன்படுத்தவும். எனினும், குதவழி உடலுறவின்போது உடைதல், கசிதல் மற்றும் நழுவுதல் போன்ற பாதிப்புகளால் ஆணுறைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
லேட்டக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்களை பயன்படுத்தவும்.
வலி அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரை அணுகவும்.
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி அதில் ஈடுபடாமல் இருப்பதேயாகும்!