Home உறவு-காதல் அந்த நேரத்தில் பேசும் அன்பு மொழி முத்தம்

அந்த நேரத்தில் பேசும் அன்பு மொழி முத்தம்

74

bf7084ac6a4b48a750e83a71c07b2ad1ஃபிரெஞ்சுக்காரர்களை கேட்டால்… ‘முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியினருக்கு சரியாக முத்தம்கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள்.

ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்? பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற முத்தங்களினால் பரவும் நோய்கள்பற்றியும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவத் துறைப் பேராசிரியர் சுந்தரமூர்த்தி விளக்கமாகப் பேசினார்.

‘முத்தத்தினால் பல நன்மைகள் இருக்கின்றன. தங்களது அன்பின் ஆழத்தை இது தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிற்றின்ப நுகர்வுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆழமாக, நிதானமாக அளிக்கப்படும் முத்தம் ஒன்றின் மூலம் 60 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறது.

முத்தம் முகச்சுளிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வாயைச் சுத்தமாக வைத்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) ஓரளவு அதிகரிக்கிறது” என பாஸிடிவ் பாயின்ட்களை அடுக்கிய டாக்டர் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய ஏரியாக்களைப் பற்றியும் விளக்கினார்.

”நெற்றி, உச்சந்தலை, கைகள் போன்றவற்றில் கொடுக்கப்படும் முத்தங்களினால் நோய்த்தொற்றுகள் அதிகமாகப் பரவுவது இல்லை. இவை மேலோட்டமான முத்தங்கள். ஆனால், உதட்டின் மீது உதட்டைப் பொருத்தி, உமிழ்நீர்கள் பரிமாற்றம் ஆகின்ற முத்தங்களின்போது கண்டிப்பாக எச்சரிக்கை தேவை.

கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர உமிழ்நீர்ப் பரிவர்த்தனையோடு நடக்கும் தாம்பத்தியத்தைத் தாண்டி வேறு ஒருவருக்கு ‘ஃபிரெஞ்ச் முத்தம்’ கொடுக்க எவருக்கேனும் சபலம் ஏற்பட்டால் அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது.

ஒருவரின் உமிழ்நீரில் நோய்களைப் பரப்பும் நுண் உயிரிகள் ஏராளமாக இருக்கின்றன. அவை ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு போனால், சளி, ஃப்ளூ போன்றவை தொற்றிக்கொள்ளக்கூடும். மோனோ நியூக்ளியோஸிஸ் என்னும் நோய் உமிழ்நீரில் இருக்கும் ‘ஏப்ஸ்டெயின்பார்’ வைரஸ் மற்றும் ‘சைடோமெகாலோ’ வைரஸ்களால் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொண்டையில் வெண் படலம் தோன்றும். தசைகளில் வலி இருக்கும். பசியின்மை தோன்றும். உடலில் கொப்பளங்களும் வரலாம்.

அடிக்கடி வாய் உலர்ந்து போகிறவர்களின் வாயில் மற்றவர்களைவிடவும் நான்கு மடங்கு எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும்.

கிளாமிடியா, கொனேரியா போன்ற பால்வினை நோய்க் கிருமிகளும் வாய்மீது வாய் வைத்து அழுந்தக் கொடுக்கும் முத்தத்தின் மூலம் பரவ வாய்ப்பு இருக்கிறது.

பாலியல் தொழிலாளிகளுக்கு வாயில் முத்தம் கொடுப்பதால் இந்த மாதிரி கொடிய நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவை மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் சுந்தரமூர்த்தி.

உமிழ்நீருக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் உண்டு. உமிழ்நீரில் இருக்கும் லைசோஸைம் போன்ற வேதிப்பொருட்களுக்கு, தீங்கு செய்யும் நுண் உயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால், நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் சிலவற்றை இது அழிப்பதில்லை.

உரிய துணை/இணைக்கு மட்டுமே முத்தம் கொடுப்பதன் மூலமும் முத்தமிடும் முன்னும் பின்னும் வாயைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முத்தத்தினால் வரும் நோய்களின் தொற்றை முற்றாகத் தவிர்க்கலாம். எனவே ‘இச்’சுக்கு முழுவதுமாகத் தடா போட வேண்டிய அவசியம் இல்லை. எச்சரிக்கையோடு இருந்தால் நீங்களும் கமல் ஹாசன்தான்