Home சூடான செய்திகள் தாம்பத்ய `சங்கீதம்’

தாம்பத்ய `சங்கீதம்’

27

16-1376655896-sex6yj3-600செக்ஸ் விஷயத்தில் மனிதர்களுக்குத் தயக்கங்கள், தாம் செய்வது சரியா, தவறா என்ற சந்தேகங்கள் அதிகம்.
பொதுவாக மனிதர்கள் செக்சில் தாம் செய்வது இயல்பானதுதானா என்று சந்தேகப்படும் சில விஷயங்களும், அவற்றுக்கு நிபுணர்களின் விளக்கங்களும் இங்கே…

நிம்மதிக்காக நாடுவது சரியா?
“பெண்கள் தங்களின் துணைவர் களுடன் செக்ஸ் மூலம் ஓர் உடனடித் தொடர்பை உணர்கிறார் கள்” என்று கூறுகிறார், பாலியல் நிபுணரும் மனோதத்துவ ஆலோசக ருமான வர்க்கா சுலானி. தம்பதி களுக்கு இடையே சண்டை ஏற் பட்ட சூழலில் மனதுக்குள் புகைச் சல் இருந்து கொண்டே இருக்கும். அப்போது தீவிரமான உடல் நெருக்கதுக்கு செக்ஸ் ஏற்ற வழி. “சண்டைக்குப் பிறகு தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதால் நீங் கள் அதற்குத் தீர்வு காணாமலி ருக்கலாம். ஆனால் அப்போதைய அமைதியை அது உறுதி செய்யும்” என்கிறார் வர்க்கா.

எத்தனை நாளைக்கு ஒருமுறை?
“செக்ஸ் விஷயத்தில் நீங்கள் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு, அவர்களின் நிலையை உங்களுக்கான அளவு கோலாகக் கொள்ள வேண்டாம்” என்று ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். “சிலர் தினசரி செக்ஸ் வைத்துக்கொள்ள முடியவில்லையே என்று கவலைப்படுகிறார்கள். பல சந்தோஷமான தம்பதிகள் வாரத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் உறவு வைத்துக்கொள்வதில்லை. தம்பதிகள், இருவரின் தேவை, ஆர்வத்தைப் பொறுத்து எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அது வேண்டும் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்” என்கிறார் சுதாகர்.