கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனமொத்து இருப்பது அவசியம். இருவருக்கிடையே உண்டாகும் சிறுசிறு விஷயங்கள் கூட இருவரிடையே பிரச்னைகள் உண்டாகிவிடும். அதுபோன்றவற்றை களைவதற்காக திருமணமான புதிதில் பெண்களுக்கு தலையணை மந்திரம் என்ற ஒன்று சொல்லித்தரப்படும்.
அந்த தலையணை மந்திரம் என்ன என்பது இன்றுவரையிலும் புரியாத புதிராகவே இருந்து வந்தது. அந்த புதிர் இதோ இங்கு அவிழ்க்கப்படுகிறது. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
தலையணை மந்திரங்கள் 16
கணவனிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் சந்தேகங்களையும் உடனுக்குடன் கேட்டுவிட வேண்டும்.
எதிர்காலம் பற்றிய உங்கள் எண்ணங்களையும் உங்கள் கணவரின் கருத்துக்களையும் குட்க வேண்டும்.
வீட்டில் கணவரை மகாராஜா போல நடத்த வுண்டும். வெளியில் எப்படி இருந்தாலும் வீட்டில் அவர்தான் தலைவர் என்னும் அங்கீகாரத்தைக் கொடுங்கள்
வாக்குவாதங்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். பொதுவாக ஆண்கள் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால் நீங்களே புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்களுக்கு விட்டுக்கொடுங்கள்.
கணவரை வேறு ஆண்களுடன் ஒப்பிடக்கூடாது. அது நம்முடைய சகோதரர், தந்தையாகக் கூட இருக்கலாம். ஒப்பிட்டு பேசக்கூடாது.
மிகச்சிறந்த நட்பில் ஒருவராக நீஞ்கள் மாற வேண்டும்.
கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்
செலவுகளை முன்கூட்டியே தீர்மானிக்க திட்டமிட வேண்டும்.
கணவருக்கு மதிப்பளிகாத உறவினர்களை ஒதுக்குங்கள். மதிப்பு கொடுங்கள்.
பழைய சண்டை நிகழ்வுகளையோ அவர் செய்த தவறுகளையோ சொல்லிக்காட்டிக் கொண்டே இருக்கக்கூடாது.
வீட்டை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.