தாய்வானில் அரசியல்வாதி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் நீச்சலுடை அணிந்த நடன மங்கைகள் 50 பேர் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றமை பெரும் எண்ணிக்கையான மக்களை வியக்க வைத்தது. இந்த ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தாய்வானின் தென் பிராந்தியத்திலுள்ள சியாயி எனும் நகரைச் சேர்ந்த துங் ஹ்சியாங் என்பவரின் இந்த மரண ஊர்வலம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உள்ளூராட்சி உறுப்பினரான துங் ஹ்சியாங் என்பவர் கடந்த மாதம் தனது 76 ஆவயதில் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்திலேயே நீச்சலுடை அணிந்த நடன மங்கைகளும் இவ்வாறு அணிவகுத்து சென்றனர்.சியாயி நகரில் நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 200 வாகனங்கள் பல கிலோமீற்றர் தூரம் அணிவகுத்துச் சென்றன.நீச்சலுடை அணிந்த நடன மங்கைகள் 50 பேர் திறந்த வாகனங்களில் நின்றுகொண்டு சென்றனர்.
இவர்களைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் வீதியோரங்களில் திரண்டனர். இதனால் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.