Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பாலைக் கொண்டு இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் எனத் தெரியுமா?

தாய்ப்பாலைக் கொண்டு இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் எனத் தெரியுமா?

39

இங்கு தாய்ப்பாலைக் கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் ஆரோக்கியமானது என்பது அனைவருக்குமே தெரியும். தாய்ப்பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-பாடிகள் உள்ளது. எந்த ஒரு உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது. இந்த தாய்ப்பால் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும்.

இங்கு தாய்ப்பாலைக் கொண்டு எந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பிரச்சனைகளுக்கு தாய்ப்பாலைக் கொண்டு விரைவில் தீர்வு காணுங்கள்.

கண்களில் தொற்றுநோய்கள் சில பிறந்த குழந்தைகளுக்கு கண்களில் தொற்றுக்கள் ஏற்படும். இம்மாதிரியான சூழ்நிலையில் தாய்ப்பாலை காட்டனில் நனைத்து, கண்களைத் துடைத்து எடுங்கள். ஒருவேளை உங்கள் குழந்தையின் கண் சிவப்பு நிறத்தில் இருந்தால், அப்போது கண்களில் ஒரு துளி தாய்ப்பாலை விடுங்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியோர்களுக்கும் பொருந்தும்.

காதுகளில் தொற்றுநோய்கள் குழந்தைகளுக்கு 6-8 மாதங்களில் காதுகளில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே அழும் குழந்தையை பலவாறு சமாளித்தும் சமாதானமாகாமல் இருந்தால், குழந்தையின் காதுகளில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தம். அப்போது உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையுடன் காதுகளில் தாய்ப்பாலை சிறிது விடுங்கள்.

முகப்பரு தாய்ப்பாலைக் கொண்டு முகப்பருக்களைப் போக்கலாம் என்பது தெரியுமா? சில பிறந்த குழந்தைகளுக்கு 6-8 வாரங்களில் பருக்கள் வந்து மறைந்துவிடும். இருப்பினும், அப்படி வரும் முகப்பருவால் குழந்தைகளுக்கு அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க, தாய்ப்பாலைக் கொண்டு குழந்தையின் சருமத்தை துடைத்து எடுங்கள்.

வறட்சியான சருமம் உங்கள் குழந்தைக்கு சருமம் அதிகமாக வறட்சியடைந்தால், தாய்ப்பாலைக் கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இதனால் குழந்தையின் சருமம் மேன்மேலும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும்.

அரிப்புகள் சருமத்தில் ஏற்படும் அரிப்புகளுக்கு தாய்ப்பால் விரைவில் நல்ல பலனைத் தரும்