Home பெண்கள் தாய்மை நலம் தாய்பால் சுரப்பதை அதிகரிப்பது எப்படி …?

தாய்பால் சுரப்பதை அதிகரிப்பது எப்படி …?

36

தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பது எப்படி …?

பிறந்த குழந்தைக்கு தாய் ப்பால் தான் அமுதம். அந்த அமுதம் கிடைக்கப் பெறாததால் பல குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல், அடிக்கடி, உடல் நிலை சரியில்லாமல் போவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

அதே சமயத்தில், தாய்ப் பால் கொடுக்க முடியாமல் தாய் அவதி படுவதையும் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் என்னதான் தீர்வு ?

நன்கு யோசித்து பார்த்தால் நம் முன்னோர்கள் அறிவுருத்திய ஒரு சில விஷியங்கள் தென்படும்.

அதாவது, குழந்தை பிறந்த வுடனே , அடுத்த 3 நாட்களுக்கு தாய் பால் சுரப்பது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.

அந்த சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன ?

இரண்டு பூண்டை(முழுமையான பூண்டு ) எடுத்து, அதன் தோலை உரித்து , ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கவும் .

அந்த பூண்டை , தீய்க்காமல் பார்த்து கொள்ளவும்

பின்பு , இரண்டு முட்டை எடுத்து உடைத்து ,அதனுடன் இந்த பூண்டை சேர்த்து , நாம் எப்பொழுதும் செய்யும் “ ஆம்லேட்” போன்று செய்து , அந்த தாய்க்கு கொடுத்தால் , அடுத்த 5 முதல் 6 மணி நேரத்தில், தாய் பால் நன்கு சுரக்கும்.