இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனைகளை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
உத்தரபிரதேசம் – முஜாஃபர் நகர் மாவட்டத்தின் கதெளலி பகுதியில் உறைவிட பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 70 மாணவிகள் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கல்வி அதிகாரிகளினால் விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்ைகயொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், சந்திரஜித் யாதவ் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய, விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது.
சில ஆசிரியர்களின் சூழ்ச்சியினாலேயே தான் இந்த குற்றச்சாட்டில் சிக்குண்டுள்ளதாக சுரேகா தோமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் விடுதி கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகத்தினரின் தூண்டுதலால் தான் மாணவிகள் இவ்வாறு தவறான புகாரை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.