நாட்டில் நாகரீகம் எவ்வளவு வளர்ந்தாலும் மூடப் பழக்கங்களும் வளர்ந்து கொண்டே தான் உள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது பஞ்ரஸ் (Banchras) பழங்குடியினம். இந்த இனத்தைச் சேர்ந்த குடும்பத்தின் மூத்த பெண்கள் திருமணம் செய்யக் கூடாது. வயதிற்கு வந்தவுடன், விபச்சாரத்தில் ஈடுபட தொடங்க வேண்டும். வயது முதிர்ச்சியடையும் வரை அதைத் தொடர்ந்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.
அந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தரகர்களாக செயல்பட வேண்டும். மாலை நேரம் ஆனதும், தங்களை அலங்கரித்துக் கொண்டு, பெண்கள் சாலையோரங்களுக்கு வந்து விடுவார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த பிற சாதியினர் விருப்பமான பெண்களை தேர்ந்தெடுப்பார்கள்.
பஞ்ரஸ் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்களது சொந்த சகோதரிகளையே பிற காம வெறி பிடித்த மிருகங்களுக்கு இறையாக்குவார்களாம். மிக மலிவான விலையில் இந்த விபச்சாரம் நடக்குமாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10 ரூபாய்க்கு கூட விபச்சாரம் நடந்ததாக ஒரு ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதனை தடுக்க அந்த சமூகத்தை சேர்ந்த சில படித்த இளைஞர்கள் முயன்றுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்களாம். சாதியில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தும், பழமைவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். நமது சாதியை கடவுள் படைத்ததே, பிறரை மகிழ்விக்கத் தான் என அந்த சாதித் தலைவர்கள் கூறுவார்களாம்.
இருப்பினும் சாதித் தொழிலை விட்டுவிட்டு, நகரங்களில் குடிபெயரும் பஞ்ரஸ் சாதியினரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த சாதியினரின் பின்தங்கிய நிலையை பயன்படுத்தி, அவர்களை தொடர்ந்து அந்த தொழிலிலேயே இருக்கவைக்க அரசியல் தலைவர்கள் முதல் அதிகாரிகள் வரை முயன்று வருவதாகவும் புகார் உள்ளது. எனினும் சில அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு, இந்த துயரங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளனர்.