Home சூடான செய்திகள் Teen Sex Care இளம் தலைமுறையினர் உடலுறவில் தோற்றுப்போவது ஏன்

Teen Sex Care இளம் தலைமுறையினர் உடலுறவில் தோற்றுப்போவது ஏன்

32

தற்போதைய தலைமுறையினரிடம், வாழ்வியல் சார்ந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் இவர்களது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் வேகம், சூழ்நிலை, வேலைப்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனால் வசதி வாய்ப்புகள் அதிகரித்தது என்று மகிழ்ந்தாலும், வாழ்க்கையின் அடிப்படையான இல்லறம் பாதித்திருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை.

அதிலும், இன்றைய இளம்தலைமுறையினர் தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய இளம் ஆண் – பெண் பலரால் இல்லற வாழ்க்கையில் சிறந்து ஈடுபட முடிவதில்லையாம். அதற்கான காரணங்கள் என்னவென்று செக்ஸாலஜிஸ்ட் பட்டியலிடுகின்றனர்.

பெரும்பாலான இளம் ஆண் – பெண்கள் வேலையைக் காரணம் காட்டியும், வெளிநாட்டு உணவுப் பழக்கம் என்ற பெயரிலும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

தாம்பத்திய உறவில் இன்றைய தலைமுறையினர் தோல்வியுறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இளம் வயதிலேயே அதிகமாக இன்றைய தலைமுறையினர் மது, புகை மற்றும் போதை பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறார்கள். இளம் வயதிலேயே அளவுக்கு அதிகமாக இவற்றை இவர்கள் உட்கொள்வதால், இவர்களது தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

அளவுக்கு அதிகமான வேலைப்பளு, மல்டி-டாஸ்கிங் என்ற பெயரில் நால்வர் செய்யும் வேலையை ஒருவரே செய்வது போன்றவை, இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதிகரிக்கும் மன அழுத்தம் காரணமாக படுக்கையில் இவர்களால் சரியாக செயல்பட முடிவதில்லை எனக் கூறுகிறார்கள்.

தற்போதைய ஸ்மார்ட்போன் போன்ற அதிநவீன சாதனங்கள் மற்றும் சமூக இணையத்தில் மூழ்கியிருப்பது போன்றவை கூட இன்றைய இளம் தலைமுறையினரின் உடல்நலத்தை வெகுவாக பாதிக்கிறது.

முக்கியமாக, கழுத்தை தொங்க வைத்தப்படி அல்லது ஒரே நிலையில் பல மணிநேரம் படுத்து / அமர்ந்திருப்பது அவர்களின் உடலில் இருக்கும் பெரும்பாலான பாகங்களின் செயல்பாட்டுத் திறனை குறைத்துவிடுகிறது.

இன்றைய தினத்தில், இணையத்தில் இருந்து மிக ஏதுவாக வாட்ஸ்-அப்-க்கு கைமாறிவிட்டது ஆபாசப் படங்கள். இதனால், ஆபாசப்படம் பார்ப்பது அதிகரித்துவிட்டது.

இதனால் இரண்டு விஷயங்கள் பாதிக்கப்படுகிறது. எதிர்பார்ப்பு அதிகரித்து (உடல் அழகு) நிஜத்தில் நடக்கும் உடலுறவு இவர்களுக்கு அலுத்துவிடுகிறது. மற்றொன்று காதல் வாழ்க்கையை முற்றிலுமாக இது பாதித்துவிடுகிறது.