ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தன்வீர். தன்வீரும் அவரது மனைவி கூலி வேலை செய்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு 14 வயதான மகள் இருந்திருக்கிறாள்..
இந்நிலையில் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியிருக்கிறது. மனைவியும், மகளும் பட்டினியாக இருப்பதை தாங்க முடியாத தன்வீர் தனது மகளை விற்க முடிவு செய்திருக்கிறார்.
அப்போது வேலைக்காக தன்வீர் ஹரியானா சென்றபோது அங்கு ஜாட் என்பவர் பழக்கமாயிருக்கிறார். ஜாட்டும் அவரது நண்பர்களும் சேர்ந்து தன்வீர் மகளை 7 லட்சத்திற்கு விலைபேசி முடித்திருக்கிறார்கள்.
தன்வீரிடம் ஏழு லட்சம் ரூபாய் பணத்தை அளித்த அந்த மூவரும், சிறுமியை தங்களது காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் காரில் ஏற மறுத்த அந்த சிறுமி, கூச்சல் போட்டிருக்கிறார்.
சிறுமியின் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள், திரண்டு வந்து அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தன்வீர் உட்பட நால்வர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசார் விசாரித்ததில் ஜாட் மற்றும் அவரது நண்பர்கள் அந்த சிறுமியை விலைக்கு வாங்கி, விபச்சாரத்தில் தள்ள திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.