Home குழந்தை நலம் பூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்!

பூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்!

28

பெண்குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலைகளில் முதலிடத்தில் இருப்பது பூப்பெய்தல் தான். பெண் குழந்தைகளின் ஹார்மோன் வளர்ச்சியை பூப்பெய்துதலை வைத்து தான் கணக்கிடப்படுகிறது.

குழந்தை பருவத்தை விட பூப்பெய்தலின் போது அதற்குப்பிறகு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகரிக்கும், குழந்தை பருவத்தை விட இந்த பருவம் மிகவும் முக்கியமானது அந்த நேரத்தில் துரித உணவுகளையும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றம் :
இதுவரை உடலில் சந்திக்காத மாற்றத்தை உதிரப் போக்கை முதன் முதலாக பெண் குழந்தைகள் சந்திக்கும் போது உடல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதனால் அந்நேரத்தில் அவர்களுக்கு தேவையான நியூட்டிரிசியன்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியம்.

இரும்புச்சத்து :
பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானது. மாதவிடாய் ஆரம்பித்தால் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு அல்லது அனீமியா ஏற்படும். அவர்களது உணவில் எப்போதும் இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ்,கீரை,முட்டை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம்.

ப்ரோட்டீன் :
பருவ வயதில் இருக்கும் குழந்தைகள் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், உறுப்புகள் திசுக்கள் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும். முட்டை,மீன்,பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ப்ரோட்டீன் அதிகமாக கிடைக்கும்.

கால்சியம் :
உடலில் கால்சியம் சத்து குறைந்தால் அது எலும்பு மற்றும் பற்களை பாதித்து விடும்.

வளரும் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் வரை கால்சியம் அவசியம். லோ ஃபேட் டயட் மூலமாக கால்சியம் பெறலாம். அதிகமாக கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஃபோலிக் ஆசிட் :
பருவத்திற்கு வரும் இளம் பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் அவசியமாது. பழங்கள் மற்றும் கீரைகளில் இது அதிகம் காணப்படும்.

ஜிங்க் :
குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களது டி.என்.ஏவை சரி செய்ய உதவி புரியும். கறி,பருப்பு வகைகளில் ஜிங்க் அதிகப்படியாக இருக்கும். ஒரு நாளில் ஒன்பது மில்லி கிராம் வரை ஜிங்க் அவசியமாகும்.

தண்ணீர் :
என்ன தான் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே உடலுக்கு நல்லதுபயக்கும். குறிப்பிட்ட அளவு தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல் தொடர்ந்து அடிக்கடி குடிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.