உங்கள் பிள்ளைகளின் டீன் ஏஜ் நட்பு நல்ல பாதையை நோக்கிச் செல்கிறதா, தவறானதா எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
பாசிட்டிவான நட்பின் அடையாளங்கள் :
* பரஸ்பரமும் ஒற்றுமையும்
* பகிர்தலும் அக்கறையும்
* ஆதரவும் புரிதலும்
* வேடிக்கையும் மகிழ்ச்சியும்
* உற்சாகமும் உணர்வுப்பூர்வமான ஆதரவும்.
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைக்கு ஒரு நல்ல நட்பு அமைந்து விட்டதால் அவனோ(ளோ) உங்களை விட்டு விலகுவதாக அர்த்தமில்லை. ஒரு விடலைப் பருவத்துப் பிள்ளையின் வாழ்க்கையில் உண்டாகும் நல்லது, கெட்டதின் தாக்குதலை சமாளிக்க அவர்களது நண்பர்கள் உதவுவார்கள். டீன் ஏஜ் பருவத்தில் பல சமுதாய, குடும்ப மற்றும் படிப்பு சார்ந்த சுமைகளுக்கு ஆளாவார்கள். நல்ல நட்பு இருக்கும் பிள்ளைகளுக்கு படிப்பில், விளையாட்டில் அச்சுமைகளை சமாளிக்கவும், அவற்றால் உண்டாகும் மன அழுத்தங்களைப் பக்குவமாகக் கையாளவும் முடியும்.
நெகட்டிவான நட்பின் அடையாளங்கள் :
* பொசசிவ்னஸ் மற்றும் பொறாமை
* போட்டி மனப்பான்மை
* சுயநலம்
* பகிர்தலற்ற மனப்போக்கு
* தன்னை மையப்படுத்தியே பேசுவதும்
செயல்படுவதும்
* மற்ற நட்புகளையும் குடும்பத்தாரையும் விட்டு விலகச் சொல்வது
* போதைப்பொருள் உபயோகத்தை ஊக்குவிப்பது.
கண்டு கொண்டீர்களா? விடலைப் பருவத்து நட்பைப் போலவே அப்பருவத்து இனக்கவர்ச்சியும் மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று.