Home ஆரோக்கியம் TamilX doctors புரோஜெஸ்ட்ரோன் குறைவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

TamilX doctors புரோஜெஸ்ட்ரோன் குறைவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை

77

புரோஜெஸ்ட்ரோன் என்பது என்ன? (What is progesterone?)
புரோஜெஸ்ட்ரோன் என்பது பெண்களின் சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில் உருவாகும் கார்பஸ் லூட்டியம் எனும் சுரப்பியிலிருந்து சுரக்கும் பாலியல் ஹார்மோன் ஆகும்.பெண்களின் மாதவிடாய் சுழற்சியிலும் பெண்களின் கர்ப்ப காலத்தின்போதும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை புரோஜெஸ்ட்ரோனின் பங்கு என்ன? (What is the role of progesterone in women?)
கர்ப்பத்திற்காக கருப்பையைத் தயார்படுத்த புரோஜெஸ்ட்ரோன் உதவுகிறது. இது கருப்பைச் சுவர் கருவுற்ற முட்டையின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அதனைத் தடிமனாக்குவதன் மூலம் கர்ப்பத்தில் பங்களிக்கிறது.

உடலில் புரோஜெஸ்ட்ரோன் அதிகமாக உற்பத்தியாகும்போது கருமுட்டை வெளியிடப்படாது. கரு உருவாகாவிட்டால், கார்பஸ் லூட்டியம் சிதையும், இதனால் உடலில் புரோஜெஸ்ட்ரோன் அளவு குறையும்.புரோஜெஸ்ட்ரோன் அளவில் ஏற்படும் இந்த மாற்றம் மாதவிடாயைத் தூண்டுகிறது.
ஒருவேளை கரு உண்டாகியிருந்தால், புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் கருவின் வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கும் கருப்பைச் சுவரில் (என்டோமெட்ரியம்) உள்ள இரத்தக் குழாய்களைத் தூண்டி அதனை வளப்படுத்துகிறது. கார்பஸ் லூட்டியம் மட்டுமல்லாமல், நஞ்சுக்கொடி உருவானபிறகு அதிலிருந்தும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கிறது. இப்படி நஞ்சுக்கொடியில் இருந்தும் புரோஜெஸ்ட்ரோன் சுரப்பதால், கர்ப்ப காலம் முழுவதும் புரோஜெஸ்ட்ரோன் அளவு உடலில் அதிகமாகவே இருக்கும்படி பராமரிக்கப்படுகிறது. உடலில் புரோஜெஸ்ட்ரோன் அளவு அதிகரிப்பது, மேலும் கரு முட்டைகள் உற்பத்தியாகாதபடி தடுக்கப்படுகிறது. மார்பகத்தில் பால் உற்பத்தியாகவும் உதவுகிறது.

புரோஜெஸ்ட்ரோன் குறைவாக இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் (What are the problems associated with low progesterone?)
புரோஜெஸ்ட்ரோன் குறைவால் பின்வரும் பிரச்சனைகள் உண்டாகலாம்:
சீரற்ற மாதவிடாய் சுழற்சி
ஒற்றைத்தலைவலி அல்லது தலைவலி
கருவுறுவதில் பிரச்சனைகள்
கர்ப்பத்தின்போது அடிவயிற்றில் வலி
கரு உண்டானாலும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுதல் அல்லது கருச்சிதைவுக்கான ஆபத்து அதிகரித்தல்
குறைப்பிரசவம்
இவை மட்டுமன்றி, புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவதால் ஈஸ்ட்ரோஜென் அளவு மிகவும் அதிகரிக்கலாம், இதனால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம்:
பாலியல் விருப்பம் குறைதல்
எடை அதிகரிப்பு
பித்தப்பைப் பிரச்சனைகள்
தைராய்டு செயல்பாட்டில் கோளாறு
புரோஜெஸ்ட்ரோன் குறைவாக இருக்கிறது என்பது எப்படிக் கண்டறியப்படுகிறது? (How is low progesterone level diagnosed?)
புரோஜெஸ்ட்ரோன் அளவைக் கண்டறிய மருத்துவர் இரத்தப் பரிசோதனை செய்யும்படி பரிந்துரைக்கலாம்.
மாதவிடாய் சுழற்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனின் அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். மாதவிடாய் தொடங்குவதற்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்பு புரோஜெஸ்ட்ரோன் அளவு உச்சத்தில் இருக்கும், ஒரே நாளில் வெவ்வேறு நேரத்தில் அளவு மாறிக்கொண்டே இருக்கலாம். கர்ப்பத்தின்போது புரோஜெஸ்ட்ரோன் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும், மாதவிடாய் நிற்கும் சமயத்தில் குறைவாக இருக்கும்.

புரோஜெஸ்ட்ரோன் குறைவுக்கு என்ன சிகிச்சை? (What is the treatment for low progesterone?)
பெரும்பாலும், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறிகள் தென்படாவிட்டால் சிகிச்சை எதுவும் தேவையில்லை. நீங்கள் கர்ப்பமடையத் திட்டமிட்டிருந்தால், சிகிச்சை தேவைப்படும்.
அசாதாரண இரத்தப்போக்கு, சீரற்ற மாதவிடாய், கருச்சிதைவு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் அல்லது மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுதல், மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் போன்றவற்றுக்கு ஹார்மோன் சிகிச்சை கொடுக்கப்படும். இந்தச் சிகிச்சையில் புரோஜெஸ்ட்ரோன் மட்டும் பயன்படுத்தப்படும் அல்லது ஈஸ்ட்ரோஜெனும் பயன்படுத்தப்படும். மேற்பூச்சாகப் பயன்படுத்தும் கிரீம்கள், உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அல்லது பிறப்புறுப்பு வளையங்கள் போன்ற முறைகளில் ஹார்மோன்கள் உடலுக்குள் செலுத்தப்படலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
நீங்கள் கருவுறத் திட்டமிட்டிருந்தால், புரோஜெஸ்ட்ரோன் அளவு குறைவுக்கான சிகிச்சை முறைகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியும் உங்கள் பிரச்சனைகள் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் விரிவாகக் கலந்தாலோசிக்கவும். சிகிச்சைக்குப் பிறகும் தொடர்ந்து அறிவுரைகளைப் பின்பற்றிப் பராமரித்தல், செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை எவை என அறிந்துகொண்டு சரியாக நடந்துகொள்ளுதல் போன்றவற்றின் மூலம், நீங்கள் கிட்டத்தட்ட இயல்பான வாழக்கை வாழவும் கர்ப்பத்தை இயல்பாகப் பராமரிக்கவும் முடியும்.