இரண்டு மனைவிகளுடன் ஒரு கணவன் வாழ்க்கை நடத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு மனைவி இரண்டு கணவர்களை சரி சமமாக பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் சம்பவம் இங்கிலாந்தில் நடக்கிறது.
33 வயதாகும் மரியாவிற்கு 37 வயதில் பால் என்ற கணவரும் லாரா, எமி என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மரியாவிற்கு 15 வயது இருக்கும்போதே பால் உடன் திருமணமாகி 20 வருடங்கள் வாழ்க்கை அழகாக போய்க்கொண்டிருக்கும்போது, மரியாவிற்கு பீட்டர் என்ற மற்றொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கான காரணமாக மரியா கூறுவது, பணி நிமித்தமாக தன் கணவர் பால், அடிக்கடி என்னை தனிமையில் விட்டுச் சென்றுவிடுவார். 3 மாதம் 6 மாதமென்று அவர் வெளியே செல்லும்போது என்னுடைய பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் தவித்து வந்தேன். அப்போது தான் எனக்கு பீட்டர் பழக்கமானார். எனக்கு அவரைப் பிடித்திருந்தது நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டோம் என்கிறார்.
இது பற்றி பால் கூறும்போது, என்னுடைய மனைவி பீட்டரோடு காதல் வயப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பீட்டரை நான் சந்தித்த பிறகு எனக்கும் அவருக்கும் எண்ண ஓட்டங்கள் ஒன்றாக இருந்ததால் நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. பிறகு நாங்கள் ஒன்றாக முடிவெடுத்து இப்போது சேர்ந்து வாழ்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் பீட்டரும், அவர் இல்லாத நேரத்தில் நானும் மரியாவுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்வோம்.
குடும்பத்திற்கு ஆகும் செலவையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் என்னுடைய குழந்தைகளையும் பீட்டர் நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்றார்.