விதவிதமாக ஹேர் கலரிங் செய்து கொள்வதில் விருப்பமுடையவராக நீங்கள்? அப்படியே கொஞ்சம் உங்கள் ஹேர் டை மூலம் சருமத்துக்கு உண்டாகும் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, சருமத்தைப் பாதிக்காத வண்ணம் ஹேர் டை பயன்படுத்தலாமே. அப்படி ஹேர் கலரிங் செய்யும் போது எந்தெந்த வகைகளில் சருமத்தைப் பாதுகாக்கலாம்?
ஷாம்பு பயன்படுத்தக்ககூடாது
ஹேர் கலரிங் செய்வதற்கு முன்பு ஷாம்பு போட்டு குளிக்கக்கூடாது. சிலர் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹேர் கலரிங் செய்யும் நாளில் நிறைய ஷாம்பு போட்டு குளிப்பதுண்டு. ஹேர் கலரிங் செய்யும் நாட்களில் தலைமுடிக்கும் சருமத்துக்கும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது சருமத்தையும் கேசத்தையும் சேர்த்தே பாதுகாக்கும்.
வாஸ்லின்
வாஸ்லினை நாம் பல்வேறு வகைகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பாலான பார்லர்களில் இந்த முறையைத் தான் பயன்படுத்துகிறார்கள். சருமத்தில் உண்டாகும் தடிப்புகள் மற்றும் அலர்ஜியைப் போக்குவதற்கான சிறந்த மருந்தாக வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லின் சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.
ஹேர் கலர் அப்ளை செய்வதற்கு முன்பாக, முகம், கை மற்றும் காது பகுதிகளில் வாஸ்லின் தடவிக் கொள்வது நல்லது. அது சருமத்தை கெமிக்கலால் உண்டாகும் பாதிப்பிலிருந்து காக்கும்.
காட்டன்
ஹேர் கலர் செய்யும் போது, சருமத்தில் எந்தெந்த இடங்களில் படுமோ அந்த இடங்களில் காட்டனை எடுத்து மொத்தமாக வைத்து, அதில் பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி சருமத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது கெமிக்கலால் சருமத்தில் உண்டாகும் அலர்ஜியைப் போக்கும்.
ஆலிவ் ஆயில்
இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்த விரும்புவோராக இருந்தால் நீங்கள் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது. ஆலிவ் ஆயில் சருமத்தைப் பாதுகாப்பதோடு சருமத்துக்கு நல்ல பொலிவையும் தரும்.