சில விஷயங்களை தன் துணையிடம் கேட்கலாம். சில விஷயங்களை கேட்க முடியாது. குறிப்பாக பெண்கள் தங்களுக்கு எழும் இதுபோன்ற சந்தேகங்களை ஆண்களிடம் கேட்கத் தயங்குவதும் உண்டு.
அதுபோன்ற சந்தேகங்களை எப்படி தெரிந்து கொள்வது? குறிப்பாக,
ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் அது பெண்ணை உடலுறவில் அதிகமாக மகிழ்ச்சியடைய செய்யுமா என்ற கேள்வி பொதுவாகவே அனைத்து ஆண்களது மனதிலும் இருக்கும். ஆனால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஒரு ஆணின் நடத்தையில் தான் உள்ளது. உறுப்பின் அளவுக்கும் இன்பத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆணுறுப்பின் அளவு மட்டுமே ஒரு பெண்ணை உடலுறவில் மகிழ்ச்சியடைய செய்வதில்லை. ஆணின் செயல்பாடுகள் தான் ஒரு பெண்ணை திருப்திப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன. பொதுவாக பெண்கள் உயரமான மற்றும் சரியான உடற்கட்டு உள்ள ஆண்களை தான் விரும்புகிறார்களாம். ஏனென்றால் ஆணின் கம்பீரமான உடற்கட்டுக்கும் ஆண்மைக்கும் சம்பந்தம் உண்டு என பெண்கள் நினைக்கிறார்கள்.
பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை என்பது பெண்களின் வருத்தமாகவே இருக்கிறது. உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஒரு பெண்ணை திருப்திபடுத்துவதில் மிக முக்கியக் கருவியாக அமையும்.
உடலுறவுக்கு முன்பாக, அன்பான பேச்சு, கட்டியணைத்தல், சின்ன சின்ன முத்தங்கள் ஆகியவற்றுக்காக பெண்கள் அதிகம் ஏங்குகிறார்கள்.
இதையெல்லாம் சரியாகப் பின்பற்றினாலே உடலுறவில் அதிக இன்பத்தை அடைந்துவிட முடியும்.