சருமத்தில் உள்ள செல்கள் வறட்சியடைவதாலேயே முகத்தில் சுருக்கங்கள் உண்டாகின்றன. இதற்காக எத்தனை கிரீம்களைப் பயன்படுத்தினாலும் கிரீம்கள் மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய பிரச்னை ஓய்ந்தபாடில்லை.
ஆனால் வீட்டிலேயே எளிய வழியில் இந்த முகச்சுருக்கத்தை வெறும் ஐந்தே நிமிடங்களில் போக்கிக் கொள்ள முடியும்.
முட்டையின் வெள்ளைக்கருவையும் எலுமிச்சையையும் கொண்டே முகச்சுருக்கங்களை உடனடியாக விரட்டிவிட முடியும்.
முட்டையில் உள்ள புரோட்டீன் சரும செல்களின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. அதேபோன்று எலுமுிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆன்டி- ஆக்சிடன்ட்டாகப் பயன்படுகிறது. மேலும் அதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது.
ஒரு பௌலில் முட்டையிஜன் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை ஜூஸை ஒன்றாகக் கலந்து நன்கு நுரைபொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை முகம், கை,கால் ஆகியவற்றில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இக்கலவை நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
முகத்தைக் கழுவிய பின், வழக்கம்போல ஏதேனும் மாய்ச்சரைஸரை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.