இந்த தலைமுறைப் பெண்கள் படிப்பு, வேலை என்று தங்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் ஓரளவுக்கு நிறைவேற்றிய பிறகு தான் கல்யாணத்தைப் பற்றியே யோசிக்கிறார்கள். அதற்கடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற போட்டி மனப்பான்மை வந்துவிடுகிறது. இதில் குழந்தையைப் பற்றி சிந்திப்பதே 30 வயதைத் தொடும்போது தான்.
30 வயதுக்கு மேல் கருவுறாமல், குழந்தை பிறக்காமல் பரிதவிக்கும் பெண்கள் பலருண்டு. கடமைக்காக குழந்தைப் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடலாம். ஆனால் முப்பது வயதைத் தாண்டிய பிறகும் அதில் தாமதம் வேண்டாம். சிக்கல்களைச் சமாளிப்பது என்பதைக் காட்டிலும் முடிந்தவரையில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொளளலாம்.
35 வயதுக்குமேல் குழந்தை பெற்றுக் காள்ள விரும்பும் பெண்கள் சில பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும். கருத்தரித்தல் எளிதாகிவிடும்.
மிக அடிப்படையானது உணவு. நல்ல ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ள வேண்டும். மாமிசம், மீன், பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை கருமுட்டையின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் முன், குறைந்தது நான்கு மாதங்களுக்க முன்பாக ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
ஆனால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டே சாப்பிட வேண்டும்.
வாழ்க்கைத் துணையுடன் உறவு கொள்ளும் நேரமும் முக்கியம். உறவு கொள்ளும் நேரத்தை சரியாகத் தேர்ந்தெடுக்க வெண்டும். இப்போது அதற்கும் நிறைய வசதிகள் வந்துவிட்டன. ஓவுலேசன் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். அது எப்போது உறவு கொண்டால் கருத்தரிக்கும் என்பதைக் கணித்துச் சொல்லும்.
அதேபோல், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் இருந்தால் அதை முதலில் நிறுத்த வேண்டும்.
ஜிங்க் நிறைந்த உணவுகள் பலத்தைக் கொடுக்கும். குறிப்பாக, ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.