நாம் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகள் மட்டும் முக்கியமன்ற நம் செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கை முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலியல் கல்விக்கே விவாதம் செய்திடும் நம் ஊரில் இருப்பவர்கள் மத்தியில், வயது வந்தோர் உடலுறுவு கொள்ளாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி : உங்களின் இணையுடன் நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால் அது உங்கள் உடலிலுள்ள நோய்யெதிர்ப்பு சக்தியை குறைத்திடும். எளிதாக நோய்த்தொற்று ஏற்படவும், அது மிக வேகமாக பரவவும் காரணமாகிடும்.
ஸ்ட்ரஸ் : உடலுறவு என்பது மன இறுக்கத்தை போக்கும் ஓர் மாமருந்து என்று கூட சொல்லலாம். ஆரோக்கியமான உடலுறவு என்பது உங்கள் உடலில் சுரக்கும் மன இறுக்கத்திற்க்கான ஹார்மோன்கள் சுரப்பதை குறைத்திடும். இதனால் அன்றாட வேலைகளில் ரிலாக்ஸாக இருக்கலாம்.
பாலியல் உணர்வு : உடலுறவு கொண்டு நீண்ட இடைவேளி ஏற்பட்டால் , அது பாலியல் உணர்சிகளை தூண்டுவதில் சிக்கல்கள் உண்டாகும். ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைவதும், பெண்களுக்கு மனக்கிளர்ச்சி ஏற்படுத்துவதையும் குறைத்திடும்.
கவலை : செக்ஸ் வாழ்க்கை மிகவும் கடினமானதாகவும் அது ஓர் கவலை மிக்க வாழ்க்கை போன்ற கவலை உண்டாகும். இதனால் அன்றாட வேலை பாதிக்கும் அத்தோடு உடல்நலனிலும் பாதிப்பு ஏற்படும்.
செக்ஸ் ஹார்மோன்கள் : உடலுறவு கொண்டு நீண்ட இடைவேளி ஏற்பட்டிருந்தால் உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பது குறைந்திடும். அதன் பின்னர் உடலுறவு கொள்ளும் போது மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
இடைவேளி : இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம் குறைந்திடும். இணை மீது கோபம் அதிகரிக்கும் அதோடு, இணையைத் தவிர வேறு நபர்களிடம் பாலியல் உணர்வை தேட ஆரம்பிக்கும் மற்ற நபர்களிடத்தில் ஈர்ப்பு உண்டாகும்.
சுய பச்சாதாபம் : தான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற ரீதியில் சுய பச்சாதாபம் ஏற்படும். நடத்தையில் மாற்றங்கள் உண்டாகும். உடலுறவு கொண்டு நீண்டு இடைவேளி ஏற்படும் பட்சத்தில் வீண் கவலை, மனச்சோர்வு, ஆர்வமின்மை ஏற்படும். உற்சாகத்துடன் நம்மை நாமே தட்டிக்கொடுக்கும் ஓர் வேலையை உடலுறவு செய்கிறது.
மாதவிடாய் : மாதவிடாய் காலங்களில் அதீத வயிற்று வலி ஏற்படும். அதே போல உடலுறவு கொண்டு நீண்ட இடைவேளி உண்டாவதால் பெண்களின் பிறப்புறப்பு பலமிலந்து விடும். இதனால் மீண்டும் உடலுறவு கொள்ளும் போது பிறப்புறுப்பில் வலி உண்டாகும். மெனோபாஸ் காலங்களில் இது மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.
புற்றுநோய் : உடலுறவு கொண்டு நீண்ட இடைவேளி ஏற்ப்பட்டால் யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும். அதே போல ஆண்களுக்கு வரக்கூடிய ப்ரோஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
எடை அதிகரிக்கும் : டயட், உடற்பயிற்சி மட்டுமல்ல, உடலுறவு கொள்ளும் போதும் கலோரிகள் எரிக்கப்படுகிறது. உடலுறவு கொள்ளாமல் இருந்தால் கலோரிகள் எரிக்கப்படுவது குறையும் அதோடு, மனச்சோர்வு காரணமாக எந்த வேலையும் செய்திடாமல் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது, அளவில்லாமல் சாப்பிடுவது போன்றவற்றால் எடை அதிகரிக்கும்.