hasband wife qustions,antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex, tamil inpam,tamil sex kathaikal,,sexஎன் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். – நிர்மலா தேவி, ரத்தினபுரி.
மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்புபோன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வைசுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள்.சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்குஉதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள்போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம்ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.
என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார்.எனக்கு மட்டும்தான் இப்படியா? இதைசரிசெய்ய வாய்ப்பேஇல்லையா? – எல்.டி., சென்னை.
பெண்ணின் உடம்புஎன்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதேநிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம்சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படிமனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார்.அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப்பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டிமனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை.இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிறபிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள்.அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.
எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான்.திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கைகிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.
நிறைய ஆண்களிடம் காணப்படுகிறபிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில்தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின்விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வுமனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட்அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத்தெரிந்து, அதற்கேற்பகவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சைதேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்துஉங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள்எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பசிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.
என் வயது 18.வயதுக்கு வந்து நான்காண்டுகள் ஆகிறது.வெள்ளைப்போக்கு அதிகமிருக்கிறது. தவிர, டி.வி,சினிமாக்களில் நெருக்கமானஉடலுறவுக் காட்சிகளைப் பார்க்கும் போது அந்தரங்க உறுப்பில் கசிவுஇருக்கிறது. இந்த மாற்றங்கள் எனக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.தீர்வு உண்டா?
வெள்ளைப் படுதல் என்பது சாதாரணமானஒரு விஷயம்தான். அது உங்கள் உள்ளாடையை நனைக்கும் அளவுக்கோ, அரிப்புடனோ, எரிச்சலுடனோஇருந்தால், தொற்றுக் கிருமியின் தாக்குதல் என நினைத்துக் கொள்ளலாம். அப்போது மருத்துவப்பரிசோதனை அவசியம். பருவ வயதில் உணர்ச்சிகளின் உந்துதால் செக்ஸ் தொடர்பானகாட்சிகளைப் பார்த்தாலோ, படித்தாலோஅந்தரங்க உறுப்பில் கசிவு இருக்கும். அதுவும் சகஜமான ஒன்றுதான்.நீங்கள் பயப்படுகிற அளவுக்கு அது நோயோ, பிரச்சினையோஇல்லை. இயல்பாக இருங்கள்.
நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான்எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமானபுத்தகங்களையும், படங்களையும்காட்டி அதிலுள்ளது போல என்னைசம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள்தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.
தன் மனைவியைத்திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையைமனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில்ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம்என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள்இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்றுநம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாகமாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.