Home ஆண்கள் Tamil sex Parts ஆணுறுப்பு விறைத்தன்மை அதிகரிக்கணுமா?… இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…

Tamil sex Parts ஆணுறுப்பு விறைத்தன்மை அதிகரிக்கணுமா?… இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…

77

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை. இந்த விறைப்புத்தன்மை இல்லாமைக்கு நம்முடைய பழக்க வழக்கங்கள், உணவுப்பழக்கம், அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருத்தல் போன்றபல காரணங்கள் உண்டு.

ஆண்கள் சில வகை உணவுகளை உட்கொண்டு, சில வழிகளை பின்பற்றி இந்த விறைப்புத்தன்மை பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். நம்முடைய நாட்டில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுக்கின்றன.

மன அழுத்தம், உணவுப்பழக்கம் போன்ற காரணங்களால் தான் இந்த விறைப்பின்மை ஏற்படுகிறது. அதோடு மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் இதற்கு முக்கியமான காரணிகளுள் ஒன்று.

என்னென்ன சாப்பிட்டால் இந்த விறைப்பின்மை பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்?

பிளாக்பெர்ரியில் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன. அது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை அதிகரிக்க உதவும். தினமும் தூங்குவதற்கு முன்பாக ஒரு கப் ப்ளாக் பெர்ரிகளை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆணுறுப்பு விறைப்பின்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று புகைப்பிடித்தல். விறைப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமானால் நிச்சயம் புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியம்.

டார்க் சாக்லெட் என்பது பாலுணர்வைத் தூண்டக்கூடியது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலுறவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஆண்கள் டார்க் சாக்லெட்டை எடுத்துக் கொண்டால் நல்ல பயனைப் பெறலாம்.

ஆண்களுக்கு இயற்கையான முறையில் விறைப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டுமென்றால் மாதுளைப்பழச் சாற்றை பருகுங்கள். படுக்கையில் தன் சக்தியை காட்ட ஒரு கப் மாதுளை ஜூஸ் போதுமானது.

வெள்ளைப் பூண்டில் அல்லிசின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நீங்கள் உண்ணும் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக் கொண்டால் இயற்கையான முறையில் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்ய முடியும்.

ஒரு ஆண் தன்னை எப்போதும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் நல்ல பலன் கொடுக்கும்.