திருச்சியில் கணவரின் கள்ளக்காதலி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனது மகனுடன் அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, கள்ளக்காதலி வந்ததும் வளைத்துப் பிடித்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மனைவி மற்றும் மகன் கையும் களவுமாக பிடித்ததால் கூனிக் குறுகிப் போன கணவர் தனது செயலுக்காக வருந்தி மனைவி, மகனுடன் வீடு திரும்பினார்.
கள்ளக்காதலி வீட்டுக்குள்ளேயே புகுந்து சமைத்துச் சாப்பிட்டு மகா பொறுமையுடன் காத்திருந்து அவரைப் பிடித்த பெண்ணின் செயல் திருச்சியை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
திருச்சி செளந்தரராஜன் திருச்சியைச் சேர்ந்தவர் செளந்தரராஜன் (ஒரிஜினல் பெயர் அல்ல).
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் காண்டிராக்ட் வேலையில் இருநது வருகிறார்.
இவரது மனைவி பெயர் ஹேமலதா (ஒரிஜினல் பெயர் அல்ல). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள்.
மூத்த பையன் என்ஜீனியரிங் படிக்கிறார். 2வது மகன் 9ம் வகுப்பு படிக்கிறார். போக்கு சரியில்லை.
அடிக்கடி போனில் பேச்சு செளந்தரராஜனின் போக்கு சமீப காலமாக சரியில்லை. குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்தார்.
மனைவியுடன் சண்டை போட்டார். பிள்ளைகளையும் கவனிக்கவில்லை. வீட்டுக்கும் அடிக்கடி வருவதில்லை.
போனிலேயே பேசிக் கொண்டிருப்பார். இது ஹேமலதாவுக்கு சந்தேகததை ஏற்படுத்தியது.
துறையூரில் “சாட்டிலைட் வாழ்க்கை” இதையடுத்து அவர் தனது கணவரின் செயல்களை கண்காணிக்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் தனது கணவருக்கு துறையூரில் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அப்பெண் ஒரு பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவரது மின் கட்டணம், போன் பில் உள்ளிட்ட பலவற்றையும் செளந்தரராஜனே பார்த்து வந்துள்ளார்.
கிட்டத்தட்ட துறையூரில் இன்னொரு குடித்தனம் நடத்தி வந்துள்ளார் செளந்தரராஜன்.
மகனுடன் படையெடுத்தார் இதையடுத்து இனியும் பொறுக்க முடியாது என்பதால் தனது மூத்த மகனுடன் துறையூருக்குப் படையெடுத்தார்.
ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. அந்தப் பெண் தனது உறவினர் வீட்டுக்கு பெங்களூருக்குப் போயிருந்தார்.
இதனால் மனம் தளராத ஹேமலதா பூட்டை உடைத்து வீட்டுக்குள் போனார்.
ரே மாதிரி சேலை அங்கே போய்ப் பார்த்தால் தனது கணவர் வாங்கிக் கொடுத்த பொருட்களைப் பார்த்து வெகுண்டார்.
தனது வீட்டில் இருப்பதைப் போலவே, அதே போன்ற பொருட்கள் இங்கும் இருப்பதை அதிர்ந்தார்.
அதை விட தனது சேலையைப் போலவே இவருக்கும் கணவர் சேலை வாங்கிக் கொடுத்திருப்பதைப் பார்த்து வெகுண்டார்.
அந்தப் பெண் வரும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்க முடிவு செய்தார்.
சமைத்து சாப்பிட்டு வெயிட்டிங் கணவரின் கள்ளக்காதலி வீட்டிலேயே தங்கி விட்ட ஹேமலதா தனது மகனுடன் சமைத்துச் சாப்பிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார்.
நேற்றுதான் அப்பெண் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
வந்தவர் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியுடன் உள்ளே போனார்.
உள்ளே வந்தவரை ஹேமலதாவும், அவரது மகனும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
அப்பெண்ணின் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
குட்டு உடைந்தது ஹேமலதாவையும், மகனையும் திருடர்கள் என நினைத்து விட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் போய் அவர்களிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் குட்டு உடைந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
செளந்தரராஜன் வரவழைக்கப்பட்டார். போலீஸ் முன்னிலையி்ல் பேச்சுவார்த்தை நடந்தது.
தனது மனைவி, மகனிடம் மன்னிப்பு கேட்டார் செளந்தரராஜன்.
பின்னர் அவர்களுடன் வீடு திரும்பினார்.