மது அருந்தினால் செக்ஸில் அதிக ஆர்முடன் செயல்பட முடியுமா, உச்ச இன்பத்தை அடைய முடியுமா என்பது பல இளைஞர்களின் கேள்வியாக இது உள்ளது.
இது குறித்து மருத்துவர் ஒரு அளித்த பதில் திகிலை ஏற்படுத்துவதாக உள்ளது.
பெரும்பாலான ஆண்களும், பெண்களும், மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுன் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும், உச்ச இன்பத்தை அடைய முடியும் என்று தவறாக எண்ணுகின்றனர்.
உறவு என்பது ஆண்-பெண் இருவரின் மனதைப் பொறுத்தது. உடல்அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அளவைப் பொறுத்தே இது அமைகிறது. ஆண், பெண் இருவருக்கும் ஒரே வயதில் சுரக்கிறது.
போதைப் பொருள் ஆண், பெண் இருவருக்கும் உடலின் ஹார்மோன்களை சுரக்கச் செய்யும் என்பது உண்மைதான்.
இயற்கைக்கு மாறாக இவ்வாறு செய்வது நீண்ட நாள் நீடிக்காது. போதைப் பொருட்கள் உட்கொண்ட விளையாட்டு வீரர் சாதிப்பார் ஆனால் அவரின் உடல் சீர் குலைந்து போய்விடும்.
அதுபோலதான் செக்ஸ் நடவடிக்கையில் சில சமயங்களில் போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டினாலும். தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
உணர்ச்சியை அதிகம் தூண்டுவது போல தெரிந்தாலும் மனநிறைவையும், உச்ச கட்டத்தையும் பெற உதவாது.
போதைப் பொருட்களைப் போலவே மதுவும் உடலின் நரம்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதால் முதலில் மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்துவிடும்.
அதிக அளவு மதுவை உட்கொள்ளும்போது. அவர்களை மயக்கம் அடையச் செய்து என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் மாற்றிவிடும். இது பெண்களை வெறுக்க வைத்துவிடும்.
செக்ஸ் உணர்வுக்கு மனதே காரணம் ஆரோக்கியமான எண்ணம் இருந்தாலே இனியமையாக இன்பத்தை அனுபவிக்கலாம் என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.